பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிப்பதற்கு உதவினால் ரிம 10,000 வெகுமதி

petrol bஞாயிற்றுக்கிழமை  மெர்டேகா  கொண்டாட்டங்களுக்கு  15 நிமிடத்துக்கு  முன், பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  வீட்டில்  பெட்ரோல்  குண்டு  வீசியவனை அடையாளம்  காட்டுபவருக்கு  ரிம10,000  பரிசளிக்க  டிஏபி  எம்பிகளும்  சட்டமன்ற  உறுப்பினருமாக  ஐவர்  முன்வந்துள்ளனர்.

அக்குண்டு  வீச்சில்  எவரும் காயமடையவில்லை. முதலமைச்சர்  அப்போது  ஜார்ஜ்டவுனில்  வேறொரு  நிகழ்வில்  கலந்து  கொண்டிருந்தார்.

“48 மணி  நேரம்  ஆயிற்று  சம்பந்தப்பட்டவர்களைக்  கைது  செய்யாத  ஐஜிபி  தம்  கடமையில்  தவறி விட்டார்”, என ஜெலுத்தோங்  எம்பி  ஜெவ்  ஊய்  கூறினார்.

“போலீசார்  கைது  செய்வதற்கு  உதவியாக  குண்டு  வீசியவனை  அடையாளம்  காண்பிக்கும்  ஒருவருக்கு  நாங்கள் ரிம 10,000  வெகுமதி  கொடுப்போம்”, என்றாரவர்.

அவருடன்  இங்  வை  எய்க் (தஞ்சோங்), பி.கஸ்தூரிராணி (பத்து  கவான்), சைரில்  கீர்  ஜொஹாரி( புக்கிட்  பெண்டாரா), ஸ்டீபன்  சிம் (புக்கிட்  மெர்தாகாம்), ஆயர்  ஈத்தாம்  சட்டமன்ற  உறுப்பினர்  வொங்  ஹொன்  வாயும்  இருந்தனர்