மரணதண்டனை மறு ஆய்வு மனுக்கள் திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்

இந்தியாவில் மிக அரிதாகவே தூக்கு தண்டனை நிறைவேற்ப்படுகிறதுஇந்தியாவில் அரிதாகவே தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

மரண தண்டனை மறுஆய்வு செய்யக் கோரும் வழக்குகள் இனிமேல் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு திறந்த நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமையன்று தீர்ப்பளித்துள்ளது.

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் 4 நீதிபதிகள் இந்த தீர்ப்புக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதன்படி மூன்று நீதிபதிகளுக்கு குறைவான ஒரு அமர்வால் விசாரணை செய்யப்பட்டு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மனு தாரர்கள் ஒரு மாத காலத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தண்டனை குறைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட மரண தண்டனைக் கைதிகள் மறுஆய்வு செய்யக் கோர முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை தொடர்பிலான வழக்குகள் இதுவரை பொதுவாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பே விசாரிக்கப்பட்டு வந்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் மறுஆய்வு மனுக்களை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் வைத்து விசாரிக்க வேண்டுமா அல்லது திறந்த நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க வேண்டுமா என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்களை விசாரிக்கும் போதே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.

இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பல நூறு குற்றவாளிகள் இருக்கின்றனர். ஆனால் மரணதண்டனை வெகு அரிதாகவே நிறைவேற்றப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் 3 பேருக்கு மட்டுமே இந்தியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. -BBC

TAGS: