குபுர் இடைத்தேர்தல்: ஹாடி, டிஎபி காணப்படவில்லை

 

Nominationகடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் பெங்காலான் குபுர் இடைத்தேர்தல் பாஸ் கட்சிக்கு இது மூன்றாவது இடைத்தேர்தலாகும். இது சற்று மாறுபட்ட காட்சியைத் தருகிறது.

வழக்கமாக இடைத்தேர்தலில் கட்சியின் வேட்பாளருடன் சேர்ந்து செல்லும் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று வேட்பாளர் நியமனம் செய்யப்படும் இடத்தில் காணப்படவே இல்லை.

டிஎபியின் உயர்மட்ட தலைவர்களும் அங்கு காணப்படவில்லை.

மாறாக, கட்சியின் துனைத் தலைவர் மாட் சாபு பாஸ் கட்சியின் வேட்பாளர் வான் ரோஸ்டியுடன் நியமன மையத்திற்குச் சென்றார்.

வான் ரோஸ்டி கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது கூட ஹாடி அங்கு காணப்படவில்லை.

இது குறித்து கேட்கப்பட்ட போது, கட்சியில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுவதை மாட் சாபு நிராகரித்தார்,

தலைவர் இன்று மாலையில் வருவார் என்று அவர் மேலும் கூறினார்.

பல பிகேஆர் தலைவர்கள், உதவித் தலைவர் தியான் சுவா உட்பட, அவர்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

ஆனால், டிஎபி தலைவர்கள் எவரும் அங்கு காணப்படவில்லை. இதில் பிளவு ஏதும் இல்லை என்று கூறிய மாட் சாபு, சீன வாக்காளர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே இருக்கிறார்கள். அவர்கள் டிஎபி ஆதரவாளர்கள் என்றார்.