“சோம்பேறிகள்”, தந்தை சொல் மிக்கதோர் மந்திரமில்லை

 

Drm-lazy adviceமலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் சில தினங்களுக்கு முன்பு மாலாய்க்காரர்கள் சோம்பேறிகள் என்று மீண்டும் கூறியிருந்தார்.

அவரின் அக்கருத்துக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்திருந்தாலும், மலாய்க்காரர்களின் மேலாண்மைக்காகப் போராடும் சிலாங்கூர் பெர்காசா மாகாதீரின் கருத்தை தற்காத்துள்ளது.

மகாதீர் பெர்காசாவின் புரவலாக இருக்கிறார். மலாய்க்காரர்கள் குறைகூறப்பட்டுள்ளதால் மற்ற இனத்தவர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்ய வேண்டாம் என்று அந்த அமைப்பு கூறுகிறது.

“அவர் (மகாதீர்) மலாய்க்காரர்களை இழிந்துரைத்தால், மற்ற இனத்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம், ஏனென்றால் அவர் என்ன நினக்கிறார் என்பது அவர்களுக்குப் புரியாது”, என்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அக்கூட்டத்தினர் கூறியுள்ளனர்.

80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல்வேறு தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் வெற்றிகள் பெற்ற ஒருவரிடமிருந்து வந்துள்ள கருத்து அது என்று சிலாங்கூர் பெர்காசா கூறிற்று.

“மகாதீரிடமிருந்து வரும் எந்த ஒரு விவாதத்தையும் ஒரு தகப்பன் அவருடைய மகனுக்கு வழங்கும் ஆலோசனையின் வடிவமாக சிலாங்கூர் பெர்காசா காண்கிறது.

“20 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக இருந்த அந்த முன்னாள் பிரதமர் நாட்டிலுள்ள ஒவ்வொரு இனத்தையும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளார்”, என்று பெர்காசா சிலாங்கூர் கூறுகிறது.

அந்த வலசாரி அமைப்பு மகாதீரின் குறை நிறை கூறலை “திறந்த மனதுடன்” ஏற்றுக் கொண்டுள்ளதாக மேலும் கூறிற்று.

“உண்மையில், அவரது அறிவை பகிர்ந்து கொள்ள அவரின் மனமுவந்த விருப்பத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்”, என்றது சிலாங்கூர் பெர்காசா.

மலாய்க்காரர்களை பற்றி தெளிவாக புரிந்து கொள்வதற்கு மகாதீர் கூறிய கருத்துக்கு மற்றவர்களும் நன்றி கூறுவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.