தொழிலாளர்கள் உரிமைகள்: மோசமான நாடுகள் பட்டியலில் மலேசியா

 

Workers' rights-Malaysia worstதொழிலாளர்கள் வேலை செய்வதற்கு தகுதியற்ற உலக நாடுகளில் மிக மோசமான நாடுகளின் பட்டியலில் மலேசியா இடம் பெற்றிருக்கிறது. அனைத்துலக தொழிற்சங்க சம்மேளனம் (ஐடியுசி) வெளியிட்டுள்ள உலக உரிமைகள் குறியீடுகள் இதனைக் காட்டுகின்றன.

ஓராண்டு கால ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 139 நாடுகளில் தொழிலாளர்கள் அவர்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துவதில் மலேசியா அதன் அண்டைநாடுகளாக இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றைவிட பின்தங்கியுள்ளது.

1 லிருந்து 5+ வரையிலான மதிப்பீடு தரவரிசை முறையில், மலேசியா 5 ITUCஎன்று தரம்பிரிக்கப்பட்டுள்ளது. 5+ தரவரிசை தொழிலாளர்களுக்கு எவ்வித உரிமையும் அற்ற போரினால் சீரழிந்து போன நாடுகளுக்கு உரியதாகும். அவற்றில் சோமாலியா மற்றும் பாலஸ்தீனம் போன்றவை அடங்கும்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நாடுகளில் அந்நாடுகளில் பின்பற்றப்படும் சமுதாய சட்டத்துக்குட்பட்ட தன்னுரிமைகள், தொழிற்சங்கள் அமைத்தல், அவற்றில் சேர்தல், அவற்றின் நடவடிக்கைகளில் பங்கேற்றல், கூட்டுப்பேரம் பேசுதல் மற்றும் வேலைநிறுத்தம் செய்தல் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் தரவரிசை நிர்ணயிப்பதற்காக எடுத்துக்கொள்ளப்பட குறியீடுகளில் அடங்கும்.