யேமன் பிரதமர் ராஜிநாமா

Salem-Bas_2658494bயேமன் நாட்டில் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் அரசுத் தலைமையகத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் முகமது பசிண்டாவா ராஜிநாமா செய்தார்.

அரபு நாடான யேமனில் ராணுவத்தினருக்கு எதிராக ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர். தலைநகர் சனாவின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து குண்டுவீச்சும், துப்பாக்கிச் சண்டையும் நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் சண்டையில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்த நிலையில், ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள் சனா நகருக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். அவர்கள் அங்குள்ள அரசுத் தலைமையகத்தைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் முகமது பசிண்டாவா தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதிபர் அப்டிராபு மன்சூர் ஹாடி சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக அவர் குறை கூறினார்.