ஸாகிட்டுக்கு எதிராக தேச நிந்தனை புகார், 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரணை உண்டா?

 

Zahid Hamidi-Negara0-kuஇன்று பேராக் மாநில டிஎபி உள்துறை அமைச்சர் அஹ்மட் ஸாகிட் ஹமிடிக்கு எதிராக தேச நிந்தனை புகார் செய்துள்ளது.

நேற்று, பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தேச நிந்தனை கருத்துக்களைத் தெரிவித்ததற்காக அப்புகார் செய்யப்பட்டுள்ளது.

ஸாகிட்டின் பேச்சு தேச நிந்தனையானது. அது மலாய் மற்றும் சீன சமூகங்களுக்கிடையில் பிளவைத் தூண்டி விடக்கூடியது என்று பேராக் மாநில டிஎபி செயலாளர் வோங் கா வோ கூறினார்.

ஈப்போ மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அப்புகார் செய்யப்பட்டது.

“பேராக் மாநில அரசமைப்பு விவகாரம் சம்பந்தப்பட்ட நெருக்கடியின் போது கோல கங்சாருக்கு அருகில் நடந்த ஓர் ஆர்பாட்டத்தின் போதுDap Perak Wong டிஎபியினர் ராஜா மூடா (பேராக் ரீஜெண்ட்) மற்றும் அவரது காரின் மீது கற்களை எறிந்ததாக ஸாகிட் சுமத்திய குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படையற்றது என்பதோடு அவசியமற்றதுமாகும்.

“ஸாகிட் அவரது குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் அல்லது அவர் அவரது குற்றச்சாட்டை திரும்பப் பெற்றுக்கொண்டு அவர் டிஎபியிடமும் பேராக் மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவருக்கு இதன் மூலம் சவால் விடப்படுகிறது”, என்று வோங் கூறினார்.

அமைச்சர்களுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் போலீஸ் புகார்கள் மீது அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுப்பாரா என்று இன்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு சவால் விட்டிருந்தார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் புகார்கள் மீது உடனடியாக, முடிந்தால் 24 மணி நேரத்திற்குள், போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் ஹாமிடி நேற்று கடவுளிடம் சத்தியம் செய்தார்.