கண்ணீர் மல்க தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் பன்னீர் செல்வம் (வீடியோ இணைப்பு)

panneer_selvam_pm_001தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மல்க ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுள்ளார்.

அ.தி.மு.க. பொருளாளராக இருந்து வரும் 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய சட்டமன்ற கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இதையடுத்து தனது சகாக்களுடன் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

அதைத் தொடர்ந்து ஆட்சியமைக்க வருமாறு பன்னீர் செல்வத்திற்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார்.

இரண்டாம் இணைப்பு:

ஆளுநர் மாளிகையில் பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர் செல்வத்துடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக கண்ணீர் மல்க பதவியேற்றுக்கொண்டார்.

யார் இந்த பன்னீர் செல்வம்?

புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள ஓ. பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி பிறந்தார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், மகன்கள் ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப், மகள் கவிதா ஆகியோர் உள்ளனர்.

கடந்த 1996–ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகர்மன்ற தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 2001–ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

அதன்பின்னர் மே 19ம் திகதி ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

பின்னர் முதல்வராக இருந்த ஜெயலலிதா டான்சி நில வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புபடி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்டெம்பர் 21ம் திகதி முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.

அதனை தொடர்ந்து வழக்கில் வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்.

அப்போது ஓ. பன்னீர்செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

2006–ம் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை இழந்தது. இந்த தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவராகவும் பதவி வகித்தார்.

2011–ம் சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டு நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.

தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, இவர் மீண்டும் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

TAGS: