உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் மலேசியப் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை

rankingடைம்ஸின்  200  தலைசிறந்த உலகப்  பல்கலைக்கழகங்களின்  ஆண்டுப்  பட்டியலில்  இவ்வாண்டும்  மலேசியப்  பல்கலக்கழகம்  எதுவும்  இடம்பெறவில்லை.

சிங்கப்பூர்  தேசிய  பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), உலகின்  தலைசிறந்த  25  பல்கலைக்கழகங்களின் வரிசையில்  இடம்பெற்றிருப்பது  குறிப்பிடத்தக்கது. அந்த  வரிசையில்  இரண்டே  இரண்டு  ஆசியப் பல்கலைக்கழகங்கள்தாம்  இடம்  பிடித்துள்ளன. ஒன்று  என்யுஎஸ்  மற்றது  தோக்கியோ  பல்கலைக்கழகம்.

இது மலேசியப்  பலகலைக்கழகங்களுக்கு  இரட்டை  அடியாகும். கடந்த  ஜூன்  மாதம்  வெளியிடப்பட்ட  100  ஆசியப்  பல்கலைக்கழகங்களின் தரவரிசைப்  பட்டியலில்கூட  மலேசியப்  பல்கலைக்கழகங்கள்   இடம்பெறவில்லை. என்யுஎஸ்  அதில்  இரண்டாவது  இடத்தைப்  பெற்றிருந்தது.

இந்த  அறிக்கை   பற்றிக்  கருத்துரைத்த  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்,  இது, மலேசியா  உலகின்  சிறந்த  கல்வி  முறையைக்  கொண்டிருப்பதாக  பெருமை  பேசிக்  கொண்டிருக்கும்  கல்வி  அமைச்சர்  முகைதின்  யாசினுக்குக்  கிடைத்த  ஒரு  பலமான  அடி  என்று  குறிப்பிட்டார்.

“இவ்வாண்டும்  மலேசியப்  பல்கலைக்கழங்கள்  பட்டியலில்  இடம்பெறவில்லை……மலாயாப்  பல்கலைக்கழகத்துடன்  ஒரே  நேரத்தில் தொடங்கப்பட்ட  என்யுஎஸ்  உலகின்  25  தலைசிறந்த  பல்கலைக்கழங்களின்  வரிசையில்  இடம்பெற்றுள்ளது……பீற்றிக்கொண்டாரே  முகைதின்… இப்போது  அவரின்  மூக்கு  உடைபட்டிருக்கும்”, என  லிம்  கூறினார்.

மலேசியாவின்  தோல்விக்கு  ஐந்தாண்டுகளுக்கு  மேலாகக்  கல்வி  அமைச்சராகவுள்ள  முகைதின்தான்  பொறுப்பு  என்றாரவர்.