இந்திய முஸ்லிம்களை இழித்துரைத்ததாக என்ஜிஓ தலைவர்மீது குற்றச்சாட்டு

rajaமலேசிய  இந்திய  முற்போக்குச்  சங்க(மிபாஸ்) தலைவர்  ஏ.இராஜரத்தினம்  இந்திய  முஸ்லிம்களையும்  இந்திய  முஸ்லிம்  காங்கிரஸையும் (கிம்மா)  நிந்தனை  செய்து  கருத்து  உரைத்ததாக  குற்றம்  சாட்டப்பட்டார்.

இராஜரத்தினம்,  ஆகஸ்ட்  மாதம்  முகநூலில்  அந்தத்  தேச  நிந்தனை  கருத்துகளைப்  பதிவிட்டிருந்ததாக  கிம்மா,  உள்துறை  அமைச்சில்  புகார்  செய்தது.

அந்த  62-வயது  ஹோட்டல் மேலாளர்மீது  குற்றவியல்  சட்டத்தின்  504வது  பகுதியின்கீழ்  குற்றம்  சாட்டப்பட்டதாக  செய்திகள்  தெரிவிக்கின்றன.

இராஜரத்தினம்  குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரியதை  அடுத்து  அவர்  ரிம4,000 பிணையிலும்  ஒருவர்  ஜாமினிலும்  விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, மிபாஸ்  தலைமைச்  செயலாளர்  எஸ். பாரதிதாசன், பெர்காசாவுக்கும்  மற்றவர்களும்  எதிராக  தேச  நிந்தனை  கருத்துத்  தெரிவித்ததாக  தாங்கள்  எத்தனையோ  தடவை  புகார்  செய்தும்  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்றார்.

“போலீசார்  எப்போதும்  இரட்டை  நியாயத்தைக்  கடைப்பிடிக்கிறார்கள். எதிரணியை  ஆதரிக்கும்  என்ஜிஓ  என்றால்  அவர்களுக்கு  எதிராக  வேகமாக  நடவடிக்கை  எடுக்கிறார்கள்”, என்றாரவர்.

அதிகாரிகள்  அரசாங்க- ஆதரவுத்  தரப்புகளுக்குச்  சிறப்புச்  சலுகை கொடுக்காமல் “அனைவரையும்  சமமாக  நடத்த  வேண்டும்”, என்றவர்  வலியுறுத்தினார்.