ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்கவில்லை!- நிபுணர் குழு குறித்து சந்தேகம்

Desmond_De_Silva1காணாமற் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூறவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரும், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்துகொள்ளாததையிட்டு அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர்கள் மூவரைக் கொண்ட குழு, கடந்த செப்டெம்பர் மாதம் 27, 28, 29, 30ஆம் திகதிகளில், கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமற் போனோரைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணையின் பங்குபற்ற மீண்டும் தவறியுள்ளனர்.

இந்த மூன்று வெளிநாட்டு அவதானிகளும் மன்னாரில் நடந்த ஆணைக்குழுவின் அமர்விலும் கலந்துக்கொள்ளவில்லை. இதனால், அவர்களது ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமற் போனோரின் குடும்ப அங்கத்தவர்களிடமிருந்து ஜனாதிபதி ஆணைக்குழு 19,284 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது. ஆயுதப் படையினரின் குடும்பங்களிலிருந்து பெற்ற 5,600 முறைப்பாடுகளும் இவற்றுள் அடங்குகின்றன.

இந்த ஆணைக்குழு இதுவரை அண்ணளவாக 1,000 முறைப்பாடுகளை ஆராய்ந்துள்ளது. சகல முறைப்பாடுகளையும் கேட்பதற்கு பல வருடங்கள் எடுக்கும் என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் பரணகம ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: