மலேசியாவில் யார் அந்த அரசியல் தமிழ்த் தலைவன்?

தமிழ் நாட்டில் தமிழ் தேசியம், அல்லது தமிழர் நாடு என்ற அரசியல் மாற்றம் வேண்டும் என்பது நியாயம். அதுபோலவே தமிழ் ஈழம் ஜபானா தமிழர்களுக்கு தமிழ் ஈழம் வேண்டும் என்பதும் நியாயம். இது தவிர்த்து இதர உலக நாடுகளில் தமிழர்கள் இந்தியனாக வாழ்கிறான் இதில் 98 சகிதம் இந்துவாக வாழ்கிறான். இங்கே மலேசியாவிலும் இந்தியர்களில் 85 %தமிழர்களில் 80 % இந்துவாக இருக்கிறான்.

இந்து உரிமை அல்லது Hindraf என்ற மதம் சார்த்த இயக்கம் பல காரணங்களுக்காக அரசியல் போக்கில் பயணித்தது தவறில்லை! அதில் மக்கள் சக்தியை ஒருவன் வசப்படுதிகொண்டான். அதில் தமிழர்கள்தான் அதிகம். ஆனால் இந்தியன் அரசியல் ஆளுமை “அன்புக்கு” அடைக்கலம் கொடுத்து மடையர்கலானோம். தமிழர்களை மயக்கி தண்ணி தெளித்த கெடா போல மஞ்சல துணி காணிக்கைக்கு குறிப்பா தமிழர்களை “ஏமாளி” ஆளாக்கியாச்சு.இது Hindraf கு முதல் அடி !!

இதன் தொடர்தான் மலேசிய இந்தியர்களை மேலும் 11 பிரிவுகளாக நஜிப் அவர்கள் நண்டு கதையாக கொக்கிகள் போட்டு இந்தியன் கொடுக்குகளை உடைத்தார். அது ஒருவித அரசு அரசியல வியூகம் எனலாம்.இடுப்பை ஒடிப்பது வேறு ,,,முதுகின் Spinal முட்டுகளை கழற்றுவது மூளைக்கே ஆணி அடிப்பதாகும். இன்று மலேசியா இந்தியனுக்கும் தமிழனக்கும் இந்த கழற்றல் சீரியஸ் ஆபரேசன் நடந்துள்ளது தெளிவு!

இதில் வேடிக்கை என்னவென்றால் உதயா/ வேதா அம்பிலும் வில்லை உருவி விசத்தை கலக்கி தமிழர் சமுதாயத்தின் மீது பாய்ச்சியாச்சி!

இன்று உதயா சொல்கிறார் “பாக்காதானில் இந்தியன் அல்லது தமிழ் தலைவர்களை நம்பி போகாதீர்கள் மற்ற இன தலைவனை நம்பி அரசியல் நடத்துங்கள், நான் போய் வருகிறேன்” என்று பாடம் சொல்கிறார்! இது அவர் பட்ட கஷ்டத்துக்கு கிடைத்த தெளிவாகவும் இருக்கலாம். இது சரியோ, தவறோ இந்த சமுதாயம் முடிவு எடுக்கட்டும் என்பதும் அவரின் திறந்த உள்ளமாக இருக்கலாம்.

ஏன் பாக்காதானை நம்புங்கள் என்று சொன்னார்? என்பதில்தான் நமது அரசியல்  ஊஞ்சல் மீண்டும் ஆட்டம் காண்கிறது ? மலேசிய இந்தியர்கள் அல்லது தமிழர்களின் அதிகமுள்ள PKR அரசியல் விளைவுகளுக்கு அன்வாரால் சரியான பதில் இல்லை. மற்றது DAP /PAS இரண்டையும் விட்டு தள்ளுவோம். காரணம் நாம் என்ன கரணம் போட்டாலும் நடுவண் அரசை இதுகள் பிடிக்கும் வரை அதுகளை நம் சக்தி நிமிர்த்த முடியாது. அங்கே நமது தலைவர்களின் நிலை அப்படி!

நாம் அடுத்த 14 வது பொது தேர்தலுக்கு மாற்றி யோசித்தால் என்ன என்று சிந்திப்போம் ?மாநில அரசுகளை விடுவோம். யாராச்சும் எப்படியாவது வரட்டும்.நாடாளுமன்ற முக்கிய நடுவண் தேர்வில் நம் கவனத்தை இப்போதே செலுத்துவோம்.

222 நாடாளுமன்ற நாற்காலியில் ஒரு 70தை இந்தியர்கள் கைப்பாற்றினால்,  பாகாதானுக்கும் தேசிய முன்னணிக்கும் மீதமான 152 சீட்டுகளில் பாதிக்கு பாதி தந்தாலும் ஒன்றுக்கு 76 வீதம் தந்தாலும் அரசை அமைக்க முடியாது. யாராச்சும் ஒருத்தன் இந்த இந்தியர்களின்/தமிழர்களின்  ஓட்டில் சமரசம் பேச வரும்போது நமது முதுகு எலும்புகள் மீண்டும் பூட்டப்ப்டலாம்.

இதற்கு இந்தியானாக அல்லது தமிழனாக தனித்து நிற்கும் ஒரு விவேக கூட்டுத தலைவன் தேவை.

இதுதான் தீர்வு என்று உதயா சிந்தித்து இருக்க வேண்டும்.”இரண்டு கண்களும் போச்சிடா நொல்லையப்பா என்று நொண்டிகிட்ட போங்கப்பா” என்பதை விட நாட்டில் ஓட்டு உரிமை பெறாத இன்னும் 40 % இந்தியர்களின் /தமிழர்களின் ஓட்டு உரிமையை வலைபோடலாம் என்பது அறிவியல் அரசியலாகும்.

2007 ல் ஆரம்பித்த indraf போராட்டம் இன்று 7 ஆண்டுகளை கடந்து சமுதாயத்துக்கு அரசியல் ரீதியில் பயன் தந்ததா? அல்லது பாதிப்பை தந்தாதா? என்று எனக்கு சொல்லத  தெரியவில்லை! எல்லோரும் சொல்வது போல நாம் விழித்துக் கொண்டோமா? அல்லது மலாய்க்காரர்களை விழிக்கசசெய்தோமா?

உண்மையை, ஆய்வுப்படி சொன்னால் என்னை தீண்டுவார்கள். அந்த எதிர்வினை அல்லது சாதனை விளையாட்டை சமுதாயத்திடம் விட்டு விடுகிறேன்.

நாட்டில் இருக்கும் அதிகமான இந்தியர்களை /தமிழர்களை அதிகமான அரசியல் கட்சிகளில் மோத விட்ட சமூதாய அரசியல் தலைவர்களை நாம் ஒவ்வொருவாக இழந்து வருகிறோம்! இதுவும் கடந்து போய்… இந்தியன் போர்வையில் ஒளிந்து தமிழர்களை அடகு வைக்கும் நிலை மாறி தமிழன்  தலைவர்கள் இந்த நாட்டில் தமிழினம் ஒரு மூன்றாம் நிலை தேசிய இனம் என்பதை தமது அரசியலுக்காக மறந்து உள்ளனர் . தமிழர்கள் இந்தியன் அடிமையில் வாழும் எண்ணத்திலிருந்து மீண்டு வந்தால் செழிப்போம் இல்லையேல் சாவோம்.

யார் இந்த மலேசியத தமிழனின்  அரசியல்  தமிழ்த தலைவன் என்பதே இன்றைய அவசரக்கேள்வி? அல்லது இந்தியான் அடையாளம் தானா நமது சாபக்கேடு…….?

மீண்டும் வருவேன், நன்றி.

-பொன் ரங்கன்