அம்னோ தலைவர்: தாய்மொழிப் பள்ளிகள் ஒற்றுமைக்குத் தடையாய் உள்ளன

schoolஒரே  வகைப்  பள்ளிகள்  மட்டுமே  இருப்பதை  அரசாங்கம்  உறுதிப்படுத்த  வேண்டும்.இவ்வாறு  வலைப்பதிவில்  பதிவிட்டிருக்கும்   செராஸ் அம்னோ  தலைவர்  சைட் அலி அல்ஹாப்ஷி. தாய்மொழிப்  பள்ளிகள்  இன  உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும்  அவற்றை  ஒழித்துக்கட்ட  வேண்டிய  தருணம்  வந்து  விட்டதாகவும்  கூறினார்.

“இனங்களைப்  பிரித்துவைக்க நினைத்த  பிரிட்டிஷ்  காலனிய  நிர்வாகத்தில்  உருவான  தாய்மொழிப்  பள்ளிகள்  இனி  நாட்டுக்குத் தேவையற்றவை”, என்றாரவர்.

இதை  மற்ற  இனத்தாரின்  தாய்மொழிகளைக்  “கொல்லும்”  முயற்சி  எனக்  கருதக்கூடாது.  அம்மொழிகளைத்  தேசிய  பள்ளிகளிலேயே கற்றுக்கொடுக்கலாம்  என்றார்.

1946-இல்  அம்னோ  தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து  எல்லா  இனங்களும்   அமைதியாக  வாழ்வதை  உறுதிப்படுத்தவே  அது  போராடி  வந்துள்ளது.

“எல்லா  இனங்களின்  நலனையும்  கருத்தில்கொண்ட  அம்னோ  எந்த  இனத்தையும்  ஒதுக்கிவைத்ததில்லை”, என  சைட்  அலி  கூறினார்.

ஒரேவகைப்  பள்ளிகளைக்  கொண்டிருப்பது  மற்ற  இனங்களை  ஒடுக்குவதாகாது  என்ற  அவர்,  கல்விமுறையின்  மூலமாகத்தான்  தேசிய  ஒற்றுமையை  அடைய  முடியும்  என  அம்னோ  நம்புவதாகக்  குறிப்பிட்டார்.

இது என்ன புது விளக்கம்? தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்துக்கட்டுவது என்பது அம்னோவின் குறிக்கோள் (Ultimate Objective).