பொய்யை நம்பியதால் சீனர்கள் வாக்களிக்கவில்லை, நஜிப்

 

Chinese belived liesபதிமூன்றாவது பொதுத் தேர்தலில் பாரிசானுக்கு சீனர்களின் வாக்குகள் பெருமளவுக்கு குறைந்ததற்குக் காரணம் அவர்கள் பொய்களை நம்பியதுதான் என்று பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார்.

“சீனர்களின் வாக்குகள் குறைந்ததற்கு என்ன காரணம் என்று கற்பனை செய்து பாருங்கள்”, என்று அவர் செத்தியா அலாம், சிலாங்கூரில் நடைபெற்ற 43 ஆவது கெராக்கான் பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.

“ஏன்? அவற்றுக்கான காரணங்களில் ஒன்று எதிரணியினர் கட்டி விட்ட 40,000 வங்காளதேசிகள் இறக்குமதி செய்யப்பட்டனர் என்பதாகும்”, என்றாரவர்.

“ஆம், இன்று நீங்கள் சிரிக்கிறீர்கள். ஆனால், (அப்போது) எத்தனை பேர் அதனை நம்பினர்?”, என்று நஜிப் வினவினார்.

“அந்த கட்டிவிடப்பட்ட பொய்யை முற்றிலும் உண்மை என்று பலர் நம்பினர்” என்று கூறிய நஜிப், கெராக்கான் மீண்டும் எழுச்சி பெற அது மேற்கொண்டுள்ள முயற்சிகளை தாம் ஆதரிப்பதாக கூறியதோடு பினாங்கை மீண்டும் கைப்பற்ற அது டிஎபியைவிட சிறந்த திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்றார்.