கெராக்கான் அதன் பேராளரைக் கட்சிநீக்கம் செய்ய வேண்டும்; மலாய் என்ஜிஓகள் கோரிக்கை

pembelaகெராக்கான் பேராளர்  ஒருவர்,  அம்னோ  தலைவர்கள் “வந்தேறிகள்” என்று  கூறுவதை  நிறுத்த  வேண்டும்  ஏனென்றால்  அவர்களும்  குடியேறி  வந்தவர்கள்தாம்  என்று  தெரிவித்த  கருத்துக்காக  அவர்மீது  மலாய்  என்ஜிஓ-கள்  ஆத்திரம்  கொண்டுள்ளன.

நேற்றைய  கெராக்கான் மாநாட்டில்  அக்கருத்தைத்  தெரிவித்த ஜோகூர்  பேராளர்  டான்  லாய்  சூன்னை  கெராக்கான்  தலைவர்  கட்சியிலிருந்து  நீக்க  வேண்டும்  என  52 மலாய்-முஸ்லிம் என்ஜிஓ-களின்  கூட்டமைப்பான பெர்தூபோஹான்  பெம்பெலா  இஸ்லாம் (பெம்பெலா) கூறியது.