தமிழீழத்தை கைவிடுவது குறித்த ஜனாதிபதியின் கருத்து கேலிக்குரியது!- இரா.சம்பந்தன்

sambanthanதமிழீழத்தை கைவிட்டால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவேன் என்று இலங்கை ஜனாதிபதி கூறியமை ஒரு கேலிக்குரிய விசயமாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

1972 ஆம் ஆண்டின் அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே, மிகவும் நியாயமாக தமிழீழம் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னரான படிப்படியான அரசியல் நிகழ்வுகள் காரணமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள், பிளவுபடாத நாட்டுக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணுவது என்ற நிலைமை எப்போதோ எட்டப்பட்டு விட்டது.

நிலைமை அப்படியிருக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இப்போது தமிழீழ கோரிக்கையை  கைவிட வேண்டும் என்று கூறும் விசயம் சிங்கள மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் முன்கூட்டியே நடத்துவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தமது அமைப்பு மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப தமது கூட்டமைப்பில் உள்ள கட்சிகளை கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

TAGS: