உதயாவின் சிறைக் கொடுமைகளை சுஹாகாம் விசாரிக்க வேண்டும்

udayaகாஜாங்  சிறையில் ஏற்பட்ட  கொடூர  அனுபவங்கள்  என  அதன்  முன்னாள்  கைதிகளில்  ஒருவரான  பி..உதயகுமார்  சொல்லியிருப்பவை  உண்மையானவையா என்பது குறித்து  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்)  விசாரணை  நடத்த  வேண்டும்  என்று புரோஹாம்  வலியுறுத்தியுள்ளது.

“சிறைகளுக்கு  வருகை  அளிக்கவும் அங்குள்ள  நிலவரங்கள்மீது பொது  விசாரணை  நடத்தவும்  சுஹாகாம்  சட்டம்  அந்த  மனித  உரிமை  ஆணையத்துக்கு  அதிகாரம்  அளிக்கிறது.

“எனவே,   கைதிகள்  நடத்தப்படும்  விதமும்  சிறை  நிலவரங்களும்   ஐநா-வின்  அடிப்படை தரங்களுக்கு  ஏற்ப  உள்ளனவா  என்பதை  சுஹாகாம்  விரிவான  ஆய்வின்வழி  உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்  என  வலியுறுத்துகிறோம்”, என  புரோஹாம்  தலைவர்  குதுபுல்  ஜமான்  புஹாரி  ஓர்  அறிக்கையில்  கூறினார்.