அரசுத்தரப்பு: அன்வாருக்கு ஐந்தாண்டு போதாது

caseஅன்வாருக்குக் குதப்புணர்ச்சி  வழக்கு-2இல் முறையீட்டு  நீதிமன்றம்  வழங்கிய  ஐந்தாண்டுச்  சிறை  போதாது  என்றும்  கூடுதல்  தண்டனை விதிக்கப்பட  வேண்டும்  என்றும்  அரசுத்  தரப்பு   வழகுரைஞர்கள்  கூறியுள்ளனர்.

கூட்டரசு  நீதிமன்றத்தில்  அரசுத்  தரப்பு  முன்வைத்துள்ள  வாதத்  தொகுப்பு  மலேசியானியின்  பார்வைக்குக்  கிட்டியது.
அதில், அவர்கள்  முறையீட்டு  நீதிமன்ற  நீதிபதிகள்  தவறு  செய்து  விட்டார்கள்  என்றும்  தண்டனை குற்றத்தின்  கடுமையைப்  பிரதிபலிக்கவில்லை  என்றும்  கூறி  இருந்தனர்.

“குற்றவியல்  சட்டம்  பகுதி  377பி  20 ஆண்டுச் சிறையும்  பிரம்படியும்  கொடுக்க  வகை  செய்வதால்  அதனுடன்  ஒப்பிடும்போது  ஐந்தாண்டுச்  சிறைத் தண்டனை  போதுமானதல்ல”, என்பது  அரசுத் தரப்பின்  வாதமாகும்.

மார்ச்  3-இல்,  முறையீட்டு  நீதிமன்றம்  அன்வார் குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளித்து  அவருக்கு  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  விதித்தது.

அதற்கு  எதிராக  அன்வார்  கூட்டரசு  நீதிமன்றத்திடம்  மேல்முறையீடு  செய்தார்.  அது  வரும்  செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு  வருகிறது.