இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் அறிக்கை இன்று வெளியீடு

genevaஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் கண்காணிப்பட்ட விடயங்கள் மற்றும் மீளாய்வு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு, அறிக்கை ஒன்றை இன்று வெளியிடவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் மனித உரிமைகள் குழு இன்று 112 ஆவது அமர்வில் போது, கண்காணிப்பின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்கள், முன்னரை பரிந்துரைகளின் முன்னேற்றங்கள் குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தவுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அரசாங்கம், அரசாங்கம் அல்லாத தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கொலைகள், காணாமல் போன சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் சித்திரவதைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அவதானத்தை செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் இலங்கை தொடர்பில் முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்த குற்றச்சாட்டையும் அந்தக்குழு மறுத்துள்ளது.

குழுவின் தலைவர் சேர் நைகல் ரொட்லியின் கருத்துப்படி, இலங்கை தொடர்பான மீளாய்வு வெறுமனே வியாபாரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் பாரிய பிரச்சினை உள்ளபோதும் அங்கு சுதந்திரம் நிலைக்க வேண்டும் என்று தமது குழு விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: