‘மகாதிரைக் கண்டு பிரமிக்கிறேன்’- யுஎம் கிளர்ச்சிக்காரர் பாஹ்மி

fahmiபல்கலைக்கழக  அதிகாரிகளின்  எச்சரிக்கையையும்  மீறி  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  சொற்பொழிவுக்கு  ஏற்பாடு  செய்ததால்  துணிச்சல்காரர்  எனப்  பெயர்  பெற்றிருக்கிறார் மலாயாப்  பல்கலைக்கழக  மாணவத்  தலைவர்  பாஹ்மி  சைனல்.

அன்வாரின்  பேச்சை  ஏற்பாடு  செய்ததால்  சிலர்  அவரை  எதிரணி  கையாள்  என்றும்  முத்திரை  குத்தியுள்ளனர்.

ஆனால், அது  உண்மை  அல்ல  என்று  மலேசியாகினிக்கு  வழங்கிய  நேர்காணலில்  மறுக்கிறார்  பாஹ்மி.

தாம்  அம்னோவின்  மூத்த  தலைவரும்  முன்னாள்  பிரதமருமான  டாக்டர்  மகாதிர்  முகமட்டின்  இரசிகன்  என்றாரவர்.  இப்படிச்  சொல்வதால்  அன்வாருக்கு  எதிரி  என்று  யாரும்  நினைத்து  விடக்கூடாது  என்றும்  அவர்  சொன்னார்.

மகாதிரின்  தொலைநோக்குப்  பார்வையும், பரந்த  படிப்பறிவும்  நாட்டை  உருவாக்கிய  திறமையும்  துணைப்பிரதமராக  இருந்த  அன்வாரை  அப்பதவியிலிருந்து  தூக்கக்   கையாண்ட  உத்தியும்  பிரமிக்க  வைப்பதாக  பாஹ்மி  கூறினார்.

“(அரசியல்) தந்திரத்தை  மகாதிரிடமிருந்துதான்  கற்றுக்கொள்ள  வேண்டும்”,  என்று  குறிப்பிட்ட  அவர், மகாதிரின்  சுயசரிதையான Mahathir’s memoirs A Doctor in The House  நூல்  தாம்  விரும்பிப்  படிக்கும்  நூல்களில்  ஒன்று  என்றும்  சொன்னார்.