விடு என்கிறது டிஏபி, விடாதே என்கிறது அம்னோ

rallyஅன்வார்  இப்ராகிமின்  சொற்பொழிவுக்கு  ஏற்பாடு  செய்த
மலாயாப் பல்கலைக்கழக  மாணவர்கள்  விசயத்தில்  அம்னோவும்  டிஏபியும்  முட்டிமோதிக்  கொண்டிருக்கின்றன.

மாணர்கள்மீது  போலீஸ் புகாரைக்  கைவிடச்  சொல்கிறது  டிஏபி. ஆனால், புத்ரி  அம்னோ  பல்கலைக்கழக  நுழைவாயில்  கதவுகளை  உடைத்துக்கொண்டு  உள்ளே  சென்ற  மாணவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கத்தான் வேண்டும்  என்பதில்  பிடிவாதமாக  இருக்கிறது.

“அது (பல்கலைக்கழகம்) மாணவர்களையும் முன்னாள்  மாணவர்களையும்  விரிவுரையாளர்களையும், மலேசிய  மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு  சரிவுகண்டிருக்கும்  அதன்  அனைத்துலக  மதிப்பைத்  தூக்கி  நிறுத்த  வேண்டும்”, என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

“வெஞ்சினம்”  கொண்டு மாணவர்களையும்  விரிவுரையாளர்களையும்  தண்டிக்கும்  முயற்சி  வேண்டாம்  என்றவர்  கேட்டுக்கொண்டார்.

ஆனால், புத்ரி  தலைவர் எர்மயாதி  சம்சுதினுக்கு  அதில்  உடன்பாடில்லை. பல்கலைக்கழக  விதிமுறைகளை  மீறிய  மாணவர்கள்மீது  நடவடிக்கை  தேவை  என்றாரவர்.

நடவடிக்கை  எடுக்காதிருப்பது   பல்கலைக்கழகத்தின்  பலவீனத்தைக்  காண்பிக்கும்  அடையாளமாகும்  என்று  அவர்  அம்னோ ஆன்லைனில்   கூறினார்.