பைபிள் திருப்பிக் கொடுக்கப்பட்டதை மஇகா இளைஞர் பகுதி வரவேற்கிறது

mivvபைபிள்  விவகாரத்துக்குத்  தீர்வு  கண்டுள்ள  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலையை  மஇகா  இளைஞர்  பகுதி  பாராட்டியுள்ளது.

“அஸ்மின், முன்னாள் எம்பி அப்துல் காலிட்(இப்ராகிம்)  தீர்வு  காண  முடியாத ஒன்றுக்குத் தீர்வு  கண்டிருக்கிறார்”, என அதன்  தலைவர்  சி.சிவராஜா  பாராட்டினார்.

பத்து  மாதங்களுக்குமுன்  மலேசிய  பைபிள்  கழக(பிஎஸ்எம்)த்திடமிருந்து  பறிமுதல்  செய்யப்பட்ட  பைபிள்களை  சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத்  துறை(ஜயிஸ்) இன்று  காலை  சரவாக்  தேவாலயங்கள்  கூட்டமைப்பிடம்  ஒப்படைத்தது.