சிபு எம்பி: மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வேண்டாமே

sibuகுறிப்பிட்ட  மருந்துகளுக்கு  மட்டுமல்லாமல்  எல்லா வகை  மருந்துகளுக்கும்   பொருள்,  சேவை  வரியிலிருந்து  விலக்களிக்கப்பட  வேண்டும்  என  டிஏபி-இன் சிபு  எம்பி  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இப்போதுள்ள  முறைப்படி  வரி விதிக்கப்பட்ட  மருந்துகளையும் வரியற்ற மருந்துகளையும்  பிரித்துப் பார்ப்பது  மருந்தகங்களுக்கு  சிரமமாக  இருக்கும்.

“அரசாங்கம்  4வது  பதிப்பாக வெளிவந்துள்ள  தேசிய  அத்தியாவசியப்  பட்டியலில்  இடம்பெற்றுள்ள  மருந்துகளுக்கு  வரி  விலக்கு  அளித்துள்ளது.

“அதில்  இடம்பெற்றுள்ளவை  13  விழுக்காட்டு  மருந்துகள்தாம். எஞ்சிய  87 விழுக்காட்டுக்கு  6விழுக்காடு   ஜிஎஸ்டி  விதிக்கப்படும்”, என்றாரவர்.