மலேசிய இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி புதுடில்லி, உலக இந்து சமய மாநாட்டில் பேசப்படும்

 

World Hindu Congress Large Bannerஅனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த மநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர் ச. சாமிவேலு மற்றும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் ஆகியோர் செல்லவிருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் மலேசியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி உரையாற்றுவர்.

 

mic_samyஅனைத்துலக் குற்றவியல் மன்றத்தில் மலேசியா அங்கத்துவம் பெற வேண்டியதின் அவசியத்தைப் பற்றி1batu kula குலசேகரன் விவாதிப்பார். சிறுபான்மையினருக்கு குறிப்பாக சொந்த நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன ஒழிப்பு, போர்க் குற்றங்கள் இவற்றை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்த அனைத்துல குற்றவியல் மன்றம்.

பின்தள்ளப்பட்ட இந்திய சமூகம்

மலேசியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி விட்ட மலேசிய இந்துக்களுக்கு உலக இந்து சமூகம் உதவ முன்வரவேண்டியதின் அவசியத்தையும் குலா வலியுறுத்துவார்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மலாயாவும் அதன் சுற்றுப்புற நாடுகளும் இந்துக்களால் ஆளப்பட்டு, இந்து சமயமே முதன்மைச் சமயமாக இருந்து வந்துள்ளது. இன்று பாலி மட்டுமே இந்து பெரும்பான்மை கொண்ட மாநிலமாக உள்ளது.

indiraஇந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு ஒரு சாரர் சம்மதத்துடன் மதம் மாற்றபட்ட சிறார்கள் படும் கொடுமைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும். கணவனால் கைவிடப்பட்டு மதம் மாறி இரண்டு குழந்தைகளை பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திராகாந்தியின் நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்படும்.

இறுதியாக, இந்து சமயத்தின் பண்புகளும் அதன் மகத்துவமும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும்.

இந்திய நாட்டின் அமைச்சர்களையும் மற்ற நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தாம் பெருமையாகக் கருதுவதாக குலா கூறுகிறார்.

குலசேகரன் மாநாட்டில் பேசவிருக்கும் நிகழ்ச்சிக்கு இந்தோனீசியாவின் பாலி ஆளுனர் இ மாடே மாங்கு பாஸ்திக்கா தலைமை ஏற்கிறார்.

இம்மாநாட்டிற்கு மலேசியாவுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுரினாம், தென் ஆப்பரிக்கா, மொரிசீயஸ், பிரான்ஸ், ஸ்ரீலங்கா, இந்தோனீசியா, நெதர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அமைச்சர்களும் சமய அறிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.