தாக்குதல்களால் மலேசியாகினி மனஉறுதி தளரவில்லை, ஸ்டீபன் கான்

 

Mkini resolve8சுயேட்சை செய்திதளமான மலேசியாகினிக்கு எதிராகக் கடந்த 15 ஆண்டுகளாக மேகொள்ளப்பட்ட தாக்குதல்கள் அதன் மனஉறுதியைத் தகர்ப்பதில் தோல்வி கண்டன என்று அத்தளத்தின் கூட்டு நிறுவனரான ஸ்டீபன் கான் இன்று கூறினார்.

மலேசியாகினியின் 15 ஆம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதன் 1,000க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களிடம் உரையாற்றிய ஸ்டீபன் கான் மலேசியாவின் முதன் செய்தி இணையதளம் “அதிகாரத்தினரிடம் உண்மையைக் கூறும்” அதன் பணி தொடரும் என்று கூறினார்.

“இப்போதும் இல்லை, எப்போதுமே நாங்கள் போய் விட திட்டமிடவில்லை. உங்களுடைய ஆதரவுடன் நீண்ட காலத்திற்கு இங்கேயே இருக்கும் நோக்கம் கொண்டுள்ளோம். இங்கேயேயிருந்து, உங்களால் தேர்ந்தெடுத்தக்கப்பட்டவர்கள் உங்களுக்குப் பதில் கூறும் பொறுப்புடையவர்களாக ஆக்கும் எங்களது பணியைத் தொடர்வோம்”, என்றாரவர்.

கான் அவரது உரையைத் தொடங்குவதற்கு முன்பு, 56கே மோடத்தின் ஓசை ஒலிபெருக்கியின் வழி கேட்கப்பட்டது.Mkini resolve6

“இது நமக்கு பழமையை நினைவுக்குக் கொண்டுவருகிறது, இல்லையா? என்று புன்னகையுடன் மலேசியாகினியின் முதன்மை ஆசிரியரான கான் கூறினார்.

“இந்த 56கே மோடத்துடன்தான் மலேசியாகினி உலகின் இதர பாகங்களைச் சென்றடைந்தது. இன்று, இந்த சாதாரன மோடத்தை விட 400 மடங்கு வேகமாகப் போகிற தரவு வேகம் நம்மிடம் இருக்கிறது.

“உண்மையில், அன்றைய உலகம் வேறுவிதமானது. (அப்போது) மகாதிர் முகமட் அதிகாரத்தில் இருந்தார். குடிமக்கள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) பற்றிய பயத்தில் உறைந்துபோயிருந்தனர்.

“அரசியல் சந்தடியற்ற குரலில் பேசப்பட்டது. இரகசியப் போலீசார் எல்லா இடத்திலும் இருந்தனர்.

“அப்போது இணையதளம், முகநூல் டிவிட்டர் போன்ற எதுவும் இல்லை. நம்மிடம் இருந்ததெல்லாம் ஒரு செங்கல் அளவிலான Mkini resolve7கைத்தொலைபேசி – மற்றும் மலேசியாகினி.”

மாயவித்தை தாக்குதல்

மலேசியாகினி கடந்த 15 ஆண்டுகளில், இரண்டு குதப்புணர்ச்சி வழக்குகள், மூன்று பிரதமர்கள், நான்கு பொதுத்தேர்தல்கள், எண்ணற்ற இடைத்தேர்தல்கள் பற்றிய செய்திகளைச் சேகரித்துள்ளது. அதன் இரு செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளர்.

“எங்களைத் துரோகிகள் என்று ஒரு பிரதமர், மகாதிர், அறிவித்தார். இன்னொரு பிரதமர் (தற்போதைய பிரதமர்) நஜிப் வழக்கு தொடுத்துள்ளார்.

Mkini resolve4“எங்களைப் பலவீனமாக்கிய சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளோம், அடிக்கடி செய்தியாளர் கூட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டோம், ஒரு முறை போலீசார் அதிரடித் தாக்குதல் நடத்தி எங்களுடைய 19 கணினிகளைப் கைப்பற்றினர்.

“இது போன்ற அனைத்து தாக்குதல்களும் எங்களுடைய மனஉறுதியைத் தகர்த்தத் தவறியதால், சிவப்பு வர்ண சாயத்தை தெளித்தனர். Mkini resolve5எங்களுடைய அலுவலகக் கதவுப்படிகளில் கிட்டத்தட்ட இறந்தபோன ஒரு வாத்தை விட்டுச் சென்றனர்.

“ஆனால், அந்த வாத்து, மலேசியாகினியை போல், இன்னும் உயிருடனும் நலமாகவும் இருக்கிறது”, என்று கான் நகைச்சுவையோடு கூறினார்.

அந்நிகழ்ச்சியில், மலேசியாகினியின் 70 பேர் அடங்கிய பணிக்குழுவினர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

சந்தா செலுத்தி கருத்து தெரிவிக்கும் மலேசியாகினின் பல்லாயிரக்கணக்கான வாசககளுக்கு கான் வாழ்த்து தெரிவித்தார். அனைவரின் பெயர்களையும் அறிவிப்பது இயலாத காரியம் என்பதால், சிலரின் பெயர்களை கான் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள மலேசியாகினியின் புதிய அலுவலகம் @Kini திறப்பு விழா கண்டது.