பாஸ் பிரதிநிதி சிலாங்கூர் சட்டமன்றத் துணைத் தலைவர்

assemblyசிலாங்கூர்  சட்டமன்றத்தின்  துணைத்  தலைவராக  பாஸ் கட்சியின்  பாங்கி  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  முகம்மட்  ஷாபி இங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஷாபி, 28  வாக்குகள்  பெற்று  அப்பதவிக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக  மன்றத்  தலைவர்  ஹன்னா  இயோ  அறிவித்தார். சட்டமன்றத்  துணைத்  தலைவருக்கான  தேர்தலில்  பிஎன்  பிரதிநிதிகள் எவரும்  கலந்துகொள்ளவில்லை.

செகிஞ்சான்  சட்டமன்ற  உறுப்பினர்  இங்  ஸ்வீ  லின் -னும் அப்பதவிக்குப்  போட்டியிட்டார். அவருக்கு  14 வாக்குகள்தான்  கிடைத்தன.