காஜாங்கில் வெள்ளம், அசிசா எங்கே?

shamசிலாங்கூர் எதிரணித்  தலைவர்  ஷம்சுடின்  லியாஸ்,   இரண்டு நாளாக  சட்டமன்றத்துக்கு   வராத  காஜாங்  சட்டமன்ற  உறுப்பினர்  வான் அசீசா  வான்  இஸ்மாயிலைச்  சாடினார்.

அது பொறுப்பற்ற  நடத்தை  என  அந்த  சுங்கை  பூரோங்  அம்னோ  உறுப்பினர்  வருணித்தார்.

“அச்சட்டமன்ற  உறுப்பினர் (அசிசா) வெளிநாட்டில்  இருப்பதாக  அறிகிறேன்.

“அவரது  தொகுதியில்  திடீர்  வெள்ளம் ஏற்பட்டுள்ள  வேளையில் அவர்  சட்டமன்றத்தில் அல்லவா  இருக்க  வேண்டும்”, என்றவர்  சொன்னார்.

முன்னதாக,  ஷம்சுடின்  அசீசாவின்  கணவரையும்   சாடினார். அவரை மாநில  பொருளாதார  ஆலோசகராக  வைத்திருக்கக்  கூடாது  என்றாரவர்.