அம்னோதான் மலாய் நிலங்களை விட்டுக் கொடுத்தது; பாஸ் குற்றச்சாட்டு

landமலாய்க்  காப்பு  நிலங்கள்  பறிபோயிருப்பதாக அம்னோ  இளைஞர்  தலைவர்  ஓலமிடும்  வேளையில்  அதற்கு  யார்  காரணம்  என்று  அம்னோ  தன்னைத்  தானே  கேட்டுக்கொள்ள  வேண்டும்  என  பாஸ்  இளைஞர்  தகவல்  பிரிவுத் தலைவர்  முகம்மட்    நாசாயி  இஸ்மாயில்  கூறினார்.

மலாய்க்காரர்  நிலங்களைப் பாதுகாக்க  அறங்காவல்  மன்றம்  அமைக்க  வேண்டும்  என்று  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  பரிந்துரைத்திருப்பதன்  பின்னே உள்ள நோக்கம் மேலானது  என்றவர்  வரவேற்றார்.

“ஆனால், மலாய்க்காரர் காப்பு  நிலங்கள்  கைவிட்டுப்   போனதற்கு  யார்  பொறுப்பு  என  கைரி  அவரின்  அம்னோ  சகாக்களைக்  கேட்க  வேண்டும்”,  என்றாரவர்.

மேம்பாட்டுப்  பணிகளுக்காக கோலாலும்பூரைச் சுற்றியுள்ள  பாரம்பரிய  கம்பத்து  நிலங்கள் ஒய்டிஎல்  போன்ற  நிறுவனங்களுக்குத்  தாரை வார்க்கப்பட்டுள்ளன.

பேராக்கில், பிளஸ்  நெடுஞ்சாலைக்குப்  பக்கத்திலும்  “பல ஏக்கர் நிலங்கள்”  ஒய்டிஎல்-லுக்குக்  கொடுக்கப்பட்டுள்ளது.

“இவற்றை  அங்கீகரித்தது  யார்?”. மேம்பாடு  என்ற  பெயரில்  கைரியின்  ஆளும்  கட்சிதான்  அவற்றைத்  தாரை  வார்த்ததாக  அவர்  குற்றம்  சாட்டினார்.