உதயா: ஹிண்ட்ராப்பை உடைக்க ஐந்து தலைவர்கள் உருவாக்கப்பட்டது அதிகாரத்தினரின் மிகச் சிறந்த வியூகம்

 

Uthaya - Umno govt killed hindraf1அம்னோ அரசாங்கத்திடம் தாம் தோல்வியுற்று விட்டதாக ஹிண்டாப் இயக்கத்தின் நிறுவனர் பி. உதயகுமார் இறுதியாக ஒப்புக்கொண்டார்.

அம்னோ அரசாங்கம் “ஆள் பலம், பண பலம் மற்றும் ஊடக பலம் ஆகியவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்தி ஹிண்ட்ராப்பை துண்டுதுண்டாகக் கிழித்தெறிந்து விட்டது”, என்று மலேசியாகினியுடனான நேர்காணலில் உதயகுமார் கூறினார்.

“நான் தோற்றுவிட்டேன். என்னைப் பொருத்தவரையில், அவர்கள் வென்றுவிட்டனர், நான் தோற்று விட்டேன். நீங்கள் ஒரு பெரும் சக்தியை எதிர்க்கின்றீர். அது நாங்கள்  வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல்லாத ஒன்று.

“இதற்கான அடிப்படைக் காரணம் அம்னோ அரசாங்கம் பெரும்பான்மையானதாக இருக்கிறது. 8 லிருந்து 10 விழுக்காடு இந்தியர்கள் இருந்த போதிலும், இந்தியர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட கிடையாது. எங்களை நசுக்குவது மிகச் சுலபம்”, என்று உதயகுமார் விளக்கம் அளித்தார்.

இந்திய சமூகத்திற்காக குரல் எழுப்பியதற்காக உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் மற்றும் தேச நிந்தனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருந்த போதிலும், தாம் அம்னோ அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தால் வீழ்த்தப்பட்டதாக அவர் கூறினார்.

Uthaya - Umno govt killed hindraf2கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவருக்கு 30 மாதகால சிறைத்தண்டனை விதித்தது. அத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் 24 மாதங்களாக குறைத்தது. அவர் அக்டோபர் 3, 2014 இல் விடுவிக்கப்பட்டார்.

வழக்குரைஞரான உதயகுமார் ஹிண்ட்ராப் இயக்கத்தை எழுச்சிபெறச் செய்து புகழ் பெற்றார்.

“கடந்த 50 ஆண்டுகளில் எவரும் செய்யாததை நாங்கள் செய்தோம் (2007 ஆம் ஆண்டில் 100,000 இந்தியர்கள் கோலாலம்பூர் சாலைகளில் கூட வைத்தது).

“அது (பேரணி) அப்படி வெடித்து கிளம்பியது அதிருஷ்ட வசமானதோ, ஆண்டவனின் தலையீடோ அல்லது 50 ஆண்டுகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடோ, எனக்குத் தெரியாது.

“மலாய்க்காரர்கள் மற்றும் சீனர்கள் ஒருபுறமிருக்கட்டும். மேல்மட்ட இந்தியர்கள் – கல்வி கற்ற மற்றும் வணிகத்துறை சார்ந்த இந்தியர்கள் – எங்களுக்கு ஆதரவு அளிக்கவே இல்லை.

ஹிண்ட்ராப் பேரணியின் உச்சகட்டத்திற்குப் பின்னர் எங்களுக்கு ஆதரவே கிடையாது. நான் சிறையிலிருந்து 2008 ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்ட பின்னர் ஆதரவு குறைந்து விட்டது. அடுத்த நிலை தலைமைத்துவம் இல்லாமல் போய்விட்டது”, என்றார் உதயகுமார்.

இந்தியர்களின் அவலநிலையை அகற்ற வேண்டும் என்ற இலட்சியதிற்காக ஒரு சிலர் தமது உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருந்த போதிலும், தமக்கு தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

“மேல்மட்ட இந்தியர்களில் எவரும், சிறந்த அறிவாளிகளும் கூட, எங்களுடன் சேர விரும்பவில்லை. முதலாவதாக, இதனை அவர்கள் ஒரு கடுமையானதாகக் கருதினர் – ஓர் இலட்சியத்திற்காக எத்தனை பேர் சிறை செல்ல விருப்பமுள்ளவர்களாக இருக்கின்றனர்? இச்சூழ்நிலை இந்தியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதி கூட நம்மிடம் இல்லாதது இன்னும் மோசமாகியது”, என்று உதயா மேலும் கூறினார்.

 

ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள்

 

பேரணிக்குப் பின்னர், ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்கள் உருவாக்கப்பட்டது ஹிண்ட்ராப்பை உடைப்பதற்கு அதிகாரத்தினர் மேற்கொண்ட மிகச் சிறந்த வியூகமாகும்.

“பேரணி நடைபெறுவதற்கு முன்னதாக, உண்மையில் ஹிண்ட்ராப் ஒருவரின் – எனது – தலைமையில் இயங்கியது. இரண்டு அல்லது மூன்று பேர் உதவி செய்தனர். நாங்கள் தொடர்ந்து சென்று கொண்டே இருந்தோம்.

“பேரணியைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் எழுச்சி பெற்றதோடு – என்னால் விளக்க முடியாத ஏதோ ஒரு காரணத்திற்காக – அது வேகமடைந்துUthaya - Umno govt killed hindraf3 எங்கும் பரவியது. அதனை அடுத்து எனக்குத் தெரிந்தது ஒவ்வொருவரும் ஹிண்ட்ராப் தலைவர் ஆனதாகும்.

“அரசாங்கம் மேற்கொண்ட மிகச் சிறந்த நடவடிக்கைகளில் ஒன்று, ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களை உருவாக்கியதாகும். நவம்பர் 25, 2007 வரையில், நான் எவரையும் ஹிண்ட்ராப் தலைவராக நியமிக்கவில்லை.

“இது (அரசாங்கம் மேற்கொண்ட) ஓர் அரசியல் வியூகம். அவர்கள் (என்னை மட்டும் சிறையில்) உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அடைத்து வைத்திருந்து பின்னர் விடுவிக்கப்பட்டதும் நான் அநேகமாக ச. சாமிவேலுவைவிட (முன்னாள் மஇகா தலைவர்) அதிகமான சக்தியுடைவனாகி விடுவேன்.

“ஆகவே, தொடக்கத்திலிருந்தே, என்னை நீர்க்கச் செய்வதற்கு இதர நால்வரை என்னுடன் உள்ளே வைத்து விட்டனர். ஹிண்ட்ராப்பிற்கு ஐந்து தலைவர்கள் இருக்கின்றனர் என்பதை நான் முதன்முதலாக கேள்விப்பட்டது போலீஸ் படைத் தலைவர் அதை அறிவித்தபோதுதான்.

Uthaya - Umno govt killed hindraf4“அதற்கு முன்பு அப்படி ஏதும் இல்லை. நாங்கள் ஒருவரை (தலைவராக) கொண்டிருந்த போது காலத்தில், எங்களுக்கு பிரச்சனை ஏதும் இல்லை. (ஐவர் தலைவர்களாக இருக்கும் போது) நிச்சயமாக வேறுபாடுகள் இருக்கும். செயல் நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அதற்கு (பேரணிக்கு) முன்பு அவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே செயல்பட்டுள்ளனர்.

“(பேரணியில்) பேசுவதற்கான பேச்சாளராக மட்டுமே அவர்கள் வந்தனர். அவர்கள் ஐஎஸ்எயின் கீழ் தடுத்து வைக்கப்படுவதற்கான தகுதி பெற்றிருக்கவில்லை. அவர்கள் எதிர்நோக்காத நிலையில் அகப்பட்டுக் கொண்டனர்.

“இப்போது, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், நான் மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் ஐந்து ஹிண்ட்ராப் தலைவர்களால்தான் ஹிண்ட்ராப் உடைந்து விட்டது என்று கூறுகின்றனர். ஆக, மக்கள் இன்னும் ஐவரைப் பற்றிதான் பேசுகின்றனர் – உண்மையில் ஐந்து பேர் இல்லை.

“ஆக, உண்மை பொய்யாக்கப்படுகிறது; பொய் உண்மையாக்கப்படுகிறது. இதை அம்னோ அரசால் செய்ய முடிகிறது”, என்று உதயகுமார் கூறினார்.

இப்போதைக்கு தமது குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதன் வழி உதயகுமார் அவரது வாழ்க்கையில் புதியதோர் அத்தியத்தைத் தொடங்க விழைகிறார்.

—————————————————————————————————————————————————————————————-

Interview by Zakiah Koya, Alyaa Azhar and Ahmad Fadli KC.