‘இன வெறுப்பைத் தூண்டுவது’ முன்னாள் சிஜே-க்கு அழகல்ல: மசீச சாடல்

hamidசீனர்கள்  அதிகாரத்தைக்  கைப்பற்ற  தருணம் பார்த்திருப்பதாகக்  கூறிய  முன்னாள்  தலைமை நீதிபதி(சிஜே)  அப்துல்  ஹமிட்  முகமட்டை   மசீச  கடிந்து கொண்டிருக்கிறது.

“இதை, மலேசியரிடையே,  குறிப்பாக,  மலாய்க்காரர்களுக்கும்- மலாய்க்காரர்- அல்லாதாருக்குமிடையில்  வெறுப்பைத்  தூண்டிவிடும்  ஒரு  பொறுப்பற்ற  முயற்சியாகப்  பார்க்கிறோம்”, என மசீச  விளம்பரப்  பிரிவுத்  தலைவர்  சாய்  கிம்  சென்  கூறினார்.

நேற்று, பெர்காசா  ஆண்டுக்கூட்டத்தில்  பேசிய  ஹமிட்,  மலாய்க்காரர்கள்  தங்களுக்கிடையில்  சண்டையிட்டுக் கொள்வதை  அதிகாரத்தைக்  கைப்பற்றும்  வாய்ப்பாக  சீனர்கள் எண்ணிக்கொண்டிருப்பதாகக்  கூறியது  பற்றிக் கருத்துரைத்தபோது  அவர் இவ்வாறு  குறிப்பிட்டார்.