யுஎம் துணை வேந்தரின் கொடும்பாவி எரிப்பு

effigy“யுஎம் எண்மர்”  மீதான  குற்றச்சாட்டுகளைக்  கைவிட  வேண்டுமென்ற  கோரிக்கைக்குப்  பல்கலைக்கழகம்  மறுமொழி  தெரிவிக்காததால்  ஆத்திரமடைந்த  மலாயாப்  பல்கலைக்கழக  மாணவர்கள் துணை வேந்தர்  ரொஹானா யூசுப்பின்  கொடும்பாவியை  இன்று  எரித்தனர்.

வேந்தர்  கட்டிடத்துக்கு  வெளியில்  கொடும்பாவியை  எரித்த  மாணவர்கள்  சில  அறிவிப்பு  அட்டைகளையும் ஏந்தியிருந்ததாக இஸ்லாமிய  மாணவர்  சங்கத்  தலைவர்  கைருல்  நஜிப்  கூறினார். அவற்றில்  ஒன்றில்  ‘நீதிமன்றத்தில்  சந்திப்போம்’ என்ற  வாசகம்  இருந்தது.

பல்கலைக்கழகம்  மாணவர்களுக்கு  எதிரான  குற்றச்சாட்டைக்  கைவிடவில்லை  என்றால்,  அவ்விவகாரத்தை  மாணவர்கள்  நீதிமன்றத்துக்குக்  கொண்டு  செல்வர்  என்றாரவர்.