கைருடினைச் சாடுகிறது பத்து கவான் அம்னோ

b kawanமலேசியாகினிக்கு  வழங்கிய   நேர்காணலில்  பினாங்கு அம்னோவைக்  குறைகூறிய  பத்து கவான்  அம்னோ  துணைத்  தலைவர்  கைருடின்  அபு  ஹசானை  அத்தொகுதி  தலைவர்  முகம்மட்  நூர்  அஹ்மட் கடுமையாகச்  சாடி  அறிக்கை  வெளியிட்டுள்ளார். .

கைருடின் (இடம்) பினாங்கில்  இருப்பதுகூட  இல்லை,  மாநில நடப்புகளைத்  தெரிந்து  வைத்திருப்பதுமில்லை  என்றாரவர்.

“குறைகளை  எடுத்துரைக்க   கட்சிக்குள்ளேயே    வழிகள் இருக்கையில்  கைருடின்  எதிரணி- ஆதரவு  இணையத் தளத்தில்  குறைகூறியிருப்பது  வருத்தமளிக்கிறது”, என  முகம்மட்  நூர் கூறினார்.