மஇகா செயற்குழு கூட்டத்திற்குப் பின்னர் தலைவரின் கார் தாக்கப்பட்டது

Mic chaos1இன்று மாலை மஇகாவின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஓர் அவரசக் கூட்டத்திற்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தை விட்டு வெளியேறிய போது பெருங்குழப்பம் வெடித்தது.

மத்திய செயற்குழு உறுப்பினர் ஜி. குமாரின் கார் என்று நம்பப்படும் ஒரு பிஎம்டபுள்யு காரை ஒரு கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு அதனைத் தாக்கினர். போலீசார் தலையிட்டு அக்காரை வெளியே கொண்டு வந்தனர். அவர் மஇகா தலைவரின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

தலைவர் ஜி. பழனிவேலும் சினமுற்றிருந்த உறுப்பினர்களின் தாக்குதலுக்கு ஆளானார். அவரது காரை சுற்றிவலைத்துக் கொண்டு “ராஜினாமா செய்யுங்கள்” மற்றும் “எங்களுக்கு மறு தேர்தல் வேண்டும்” என்று கூச்சலிட்டனர்.

அவ்விடத்தில் பல பெருங்குழப்பங்கள் நடந்தன.

மஇகா தலைவர் பழனிவேலுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.Mic chaos4

சுமார் 100 மஇகா உறுப்பினர்கள் நடந்து கொண்டிருக்கும் மத்தியக் குழுவின் கூட்டம் சட்டப்பூர்வமானதல்ல ஏனென்றால் ஆரோஎஸ் அதனை அங்கீகரிக்கவில்லை என்று கூறிக்கொண்டு கட்சியின் கட்டடத்திற்கு அருகில் ஓர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்..

கடந்த ஆண்டு மலாக்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 3 உதவித் தலைவர்கள் மற்றும் 23 மத்திய செயற்குழு பதவிகள் செல்லுபடியாகாது என்று ஆரோஎஸ் அறிவித்துள்ளார்.