குமார் அம்மான் உயிருக்கு மருட்டலா?

kumarபுத்ரா  ஜெயாவில், சங்கப்  பதிவகத்துக்கு வெளியில்  உண்ணாவிரதம்  இருக்கும்  மஇகா  தலைமைச்  செயலாளர்  ஜி.குமார்  அம்மான், ஒரு  டெக்சியில்  வந்த  நால்வரால்  தம்  உயிருக்கு  ஆபத்து  ஏற்படவிருந்ததாகக்  கூறுகிறார்.

அதிகாலை, மணி 4.30-க்கு அச்சம்பவம்  நிகழ்ந்ததாம்.

“நான்  கழிப்பறைக்குச்  செல்லும்போது  ஒரு  டெக்சியில்  ஒருசிலர்  இருப்பதைப்  பார்த்தேன். என்னைப்  பார்த்து  புன்னகைத்தார்கள். அதனால்  அவர்களை  அணுகி  கைகுலுக்கினேன்.

“ஆனால், அது கள்ளச்  சிரிப்பாக  தெரிந்ததால்  சஞ்சலமடைந்தேன்”, என  குமார்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

வந்தவர்கள்  நண்பர்கள்போல்  பேச முயன்றார்கள். மஇகா  வியூக  இயக்குனர் கே.ராமலிங்கம்  பெயரைச்  சொல்லி  அவரது  நம்பிக்கையைப் பெற  முயன்றனர்.

குமாரின்  மனம்  நிம்மதியற்று  அலைமோதியது.  ஏனோ  அவருக்கு  அவர்கள்  துப்பாக்கிகள்  வைத்திருக்கலாம்  என்ற  எண்ணம் தோன்றியது. அதனால்  தம்  உயிருக்கு  அபாயம்  ஏற்படலாம்  என்ற  அச்சமும் தலைதூக்கியது. நல்ல  வேளையாக,  அந்த  இடத்தில் போலீஸ்  சிறப்புப்  படைப்   பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் இருப்பது  அவருக்கு  நினைவுக்கு  வந்தது.

அவர்களை  நோக்கை  வேகமாக  நடந்தார். அதைக்  கண்டதும்  அந்த  ஆட்கள்  அவர்கள்  போலீஸ்  என்பதை  உணர்ந்து அந்த  இடத்தைவிட்டு  அகன்றனர்.

எஸ்பி  அதிகாரிகள்  டெக்சி எண்ணைக்  குறித்துக்  கொண்டனர். இச்சம்பவம்  பற்றி  போலீசில்  புகார்  செய்யப்போவதாக  குமார்  கூறினார்.