இஸ்மா அரண்மனை பெயரைச் சொல்லி சிறுபான்மையினரை மிரட்டுகிறது

raoஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  117-ஆண்டுகள் பழமைவாய்ந்த  ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள்  கோயில்  புதுப்பிக்கப்பட்டதற்கு  அரண்மனை  பெயரைச்  சொல்லி  எதிர்ப்புத்  தெரிவிப்பதன்வழி  “நாட்டில்  இனங்களுக்கிடையில்  பதற்றத்தை  உண்டுபண்ண  முயல்கிறது”  என  சிலாங்கூர்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  வி.கணபதி  ராவ்  சாடினார்.

இஸ்மா, இனவாதப்  பேச்சுகளின்  மூலமாக மலேசியர்களின்  ஒற்றுமையை  உடைத்தெறிய  முயல்கிறது  என்றாரவர்.

சுந்தரராஜப்  பெருமாள்  ஆலயத்தைச்  சுற்றுலா  கவர்ச்சி  மையமாக்கும் திட்டத்தால்   ஓர்  அரச  நகரம்  என்ற  கிள்ளானின்  மதிப்பும்  மலேசியா  ஒரு  இஸ்லாமிய  நாடு  என்ற  தோற்றமும்  கெடும்  என்று  இஸ்மா கிளாங்கின்  உதவித்  தலைவர்  பாதன்  உசேன்  கூறியதாக  இஸ்மாடிவி  அறிவித்திருந்தது  பற்றி  கணபதிராவ்  கருத்துரைத்தார்.

நாட்டில்  ஒரு  இனம் அல்லது  சமயம் மட்டும்  இல்லை  என்பதை  அவர்  இஸ்மாவுக்கு  நினைவுறுத்தினார்.

இனங்களுக்கிடையில்  பதற்றத்தை  உண்டுபண்ன  முயலும்  இஸ்மா  போன்ற  தரப்புகளுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காமல்  மத்திய  அரசாங்கம் “இரட்டை  நியாயத்தை”க்  கடைப்பிடிப்பதாகவும்  அவர்  ஆத்திரப்பட்டார்.