இந்தியாவில் முதலீடு செய்வோம்: ஒபாமா

india_americaeconomic_001இந்தியாவில் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடு செய்வோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

டெல்லியில் தாஜ் பேலஸ் ஹொட்டலில் இந்தோ- அமெரிக்க முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

அதில், இந்திய தரப்பில் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, சுனில் மிட்டல், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸார் குழும தலைவர் சசி ரூயா, மகிந்திரா அன்ட் மகிந்திரா தலைவர் ஆனந்த் மகிந்த்ரா உள்பட 17 தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அமெரிக்க தரப்பில் பெப்சிகோ நிறுவனத்தைச் சேர்ந்த இந்திரா நூயி உள்பட 30 பேர் கலந்து கொண்டனர். இந்திய தொழில் அதிபர்கள், அமெரிக்காவின் விசா நிபந்தனைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பேசியதாவது, இந்தியாவும்- அமெரிக்காவும் இயற்கையான கூட்டணி கொண்ட நாடுகள். இந்தியர்கள் உலகம் முழுவதும் தொழில் நிறுவங்களை தொடங்க வேண்டும்.

இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி செல்ல வேண்டும். அமெரிக்கா இந்தியாவில் முதலீடு செய்கிறது.

ஆனால் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்கிறனர் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத வணிக திறமையாளர்கள் இந்தியாவில் உள்ளனர்.

மேலும் இரு நாட்டு வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளில் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 1 பில்லியன் டொலருக்கு அதிகமாக கடன் வழங்க ஓப்பெக் ஆதரவு தெரிவிக்கும்.

இந்தியாவுடனான வர்த்தகத்தை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்தியாவில் அமெரிக்க அமைப்புகள் ரூ.24 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்யும்.

இதில் ரூ.6 ஆயிரம் கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடனாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: