நேருக்குநேர் சந்திக்கத் தயாரா? குவான் எங்குக்கு பாஸ் சவால்

mustafaபினாங்கில்  ஊராட்சித் தேர்தல்  நடத்துவதுமீது இரு  கட்சிகளின்  நிலைப்பாடு  பற்றி  நேருக்குநேர் விவாதிக்க வருமாறு  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்டபா  அலி, டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்குக்குச்  சவால்  விடுத்துள்ளார்.

டிஏபி  பினாங்கில்  ஊராட்சித்  தேர்தல் நடத்துவதற்கு பாஸ்  இணக்கம்  தெரிவித்ததாக  லிம்  கூறுவது “பொய்” என்று  முஸ்டபா  இன்று  செய்தியாளர்  கூட்டத்தில்  கூறினார்.

பாஸ்  அதற்கு  என்றும்  இணக்கம்  தெரிவித்ததில்லை  என்கிறது. ஆனால், பாஸுக்கு  அது  பற்றி  முன்பே  தெரியும்  என்று  டிஏபி  வாதிடுகிறது.

“பொதுவில்  என்னை  நேருக்கு  நேர்  சந்திக்க  வரும்படி அவருக்குச்  சவால்  விடுகிறேன். அவர்  அவரின்  தரப்பை  எடுத்துச் சொல்லட்டும். நான்  என்  தரப்பை  எடுத்துரைப்பேன்.

“பொய்  சொல்வது யார்  என்பதை  மக்கள்  தீர்மானிக்கட்டும்”, என  முஸ்டபா  கூறினார். அப்படியானால்  லிம்முடன்  விவாதமிட  விரும்புகிறாரா  என்று  வினவியதற்கு  முஸ்டபா  பதிலளிக்கவில்லை.