ரபிஸி: பிப்ரவரியில் ரோன்95-இன் விலை ரிம1.62ஆகக் குறைய வேண்டும்

ronபுத்ரா  ஜெயா  பிப்ரவரி  மாதம் ரோன்95-இன்  விலையை  லிட்டருக்கு ரிம1.62  என  நிர்ணயம்  செய்ய  வேண்டும்  என்று  கூறுகிறார்  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி.

இந்த  விலை  ரோன்95-இன்  சந்தை  விலையைப்  பிரதிபலிப்பதாக  ரபிஸி  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

“உதவித்  தொகை  வழங்கப்படுமானால்  அதன்  விலை ரிம1.32 ஆகும்”, என்றாரவர்.

கச்சா  எண்ணெய்  விலை  தொடர்ந்து  வீழ்ச்சி  கண்டு  வருவதால்  அதற்கேற்ப   ரோன்95 விலையும்  பிப்ரவரி 1-இல் குறைக்கப்படும்  என்ற ஊகங்கள்  வலுத்து  வருகின்றன.

புத்ரா  ஜெயா  ரோன்95-இன்  விலையை  ரிம1.63 ஆகவும்  டீசலின்  விலையை  ரிம1.62 ஆகவும்  நிர்ணயிக்கக்  கூடும்  என  எண்ணெய்த் தொழில்  வட்டாரங்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தன.

இப்போது  ரோன்95-இன்  விலை  ரிம1.91. டீசல் விலை  ரிம1.93.