யாரந்த தமிழ்த் தலைவர் ?

contentwriting_1மாநாட்டு மையத்திலிருந்து…. இதுவரை பார்த்தவைகளில் சில புதுமைகள் கண்டேன் …கேட்டவை அத்தனையும் பழமை. விடுபட்ட 10 ஆண்டுகளின் மாநாடு ஆர்வம் தெரிகிறது  சில புதிய விபத்துகளை என்னுள் புரிதல் பார்த்தேன். ஆனால் இந்த மொழிக்கும் இனத்துக்கும் பாதுக்காப்பு கவசம் தொலைந்து மீண்டும் ஒரு கூடி களையும் நிழல்கள் காற்றில் அலைவதை கண்டேன். உலக அங்கீகாரம் இல்லாத ஒரு இனம் எதையோ தேடுகிறது ..

மூளைக்குள் முடுக்குகள் சிக்குகிறது.அதிகம் யோசித்தால் stroke அடித்தால் எது ஊமையாகும் என்ற பயத்தில் வெளி ஏறுகிறேன்.  நாளை போ என்கிறது உணர்வு !

ஏதும்  உண்டா ? என்கிறது என் அறிவுப்பசி! வந்தவர்கள் யோசிக்காத
விந்தை என்னை அலட்ட  என்ன நான் வேற்று கிரகத்து வினோதமா?

புரியாமல்… மாநாடு எப்படிங்க என்றேன் சிலரிடம். சிரிப்பில் சித்திரம் வரைந்த தமிழ் உறவுகள் நகர்வதில் ….தமிழுக்கும் தமிழனுக்கும் அடுத்த நகர்வு செம்மொழி மாநாடு போல செழிப்பில்லாமல்,,,பிரவாசி பரிதாபம் போல ,,,பினாங்கு சர்வதேச சாபக்கேடு தமிழ் மாநாடு போல …மாநாடுகள் மட்டும் இந்த உலகத் தமிழனை அவன் மொழியை அவன் பண்பாட்டை அவன் தோல்விகளை மீட்டு எடுக்குமா?

இந்த இனம் மதிக்கும் அளவு ஒரு தமிழ்த  தலைவனை தேடுகிறேன்?

பாரதம் அடிமைப்பட்டுக்கிடந்த காலத்தில் பாரதி சொன்னது இன்னும் நடக்கவில்லை. அவர் கவிதைகளில் கோர்த்து வைத்த சங்கமங்கள் இன்னும் சமாதனம் அடைய வில்லை.

மாநாடுகள் முடியும்,ஏடுகள் நிறையும் , அந்த உலகத் தலைவனை நாம் அடையாளம் காணாமல் அந்த புற நானூற்று தமிழ்த  தாய் வீர மகனை இனத்துக்கு இழந்தால். ஒரு  விவேக மகனை தமிழுக்கு தேடுகிறாள் மாநாடுகள் மனது வைக்கவில்லை. அவள் இன்னொரு பாரதியை கேற்கவில்லை ..வாழும் காலத்து தமிழர் மனிதம் நிறைந்த தமிழமகனைத தானே கேற்கிறாள்.  மாநாடுகள் தர தகுதி உள்ளவைதானே ? இந்த தமிழன் மனம் மட்டும் ஏன் மறுக்கிறது?

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம் 
இன நலம் எல்லாப்புகழும் தரும் 
எப்போது ?