அம்பிகா: நஜிப்பின் இந்தியர்கள் “இம்மண்ணின் மகன்கள், மகள்கள்” என்ற பேச்சு வஞ்சகமானது

 

Ambigapmநஜிப் ரசாக் 2009 ஆம் ஆண்டில் பிரதமராக பதவி ஏற்ற போது இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான இடைவெளியை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

ஆனால், அவரின் ஒரே மலேசியாவில் இப்போது மக்களிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. அப்பிளவு பெரும்பாலும் இன மற்றும் சமய அடிப்படையில் ஆனதாகும்.

பிரதமர் நஜிப் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாக இருப்பதால் அது ஒரு பயனற்ற நடவடிக்கை என்று நெகாரா-குவின் புரவலரும் வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவருமான அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.

நேற்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஆராய்வு மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நஜிப் மலேசிய இந்தியர்களை “இம்மண்ணின் மகன்கள் மற்றும் மகள்கள்” என்று வர்ணித்திருந்தது பற்றி அவரது கருத்து கேட்கப்பட்டது.

“அனைத்து இன மலேசியர்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். ஆனால் அவை கவனிக்கப்படுவதில்லை. இனம் மற்றும் சமயம் பற்றிய பிரச்சனைகள் காரணமாக அவர்கள் தாங்கள் குடிமக்களாக நடத்தப்படவில்லை என்று கருதுகிறார்கள்”, என்று அம்பிகா கூறினார்.

இடதுசாரிகள் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி விரோத மனப்பான்மைக்கு தூபமிடுகின்றனர். மக்களிடையே பிளவை ஏற்படுத்துகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியர்கள் எதிர்கொண்டுள்ள கடுமையான பிரச்சனைகள்

மலேசிய இந்திய சமூகம் பற்றிய நஜிப்பின் உரையை எந்த அளவுக்கு மலேசிய ஊடகங்கள் வெளியிடும் என்பதைக் காண தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

அடிமட்டத்தில், இந்திய மலேசியர்களின் உளப்பாடு வேறுபட்டது. (நஜிப் கூறியது போல) அவர்கள் அப்படி நடத்தப்படவில்லை. அவர்கள் ஏன் அப்படி கருதவில்லை என்பதைக் கண்டறிய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

“ஏன் அதிகமான இளைஞர்களிடையே வாய்ப்பின்மை என்ற உணர்வு மேலோங்கியுள்ளது? ஏன் இந்த அதிகமான அளவிலான குண்டர்தனம்?”

“அதிக அளவிலான இந்திய தடுப்புக்காவல் கைதிகளின் மரணம் மற்றும் இது போன்றவை அலட்சியப்படுத்தப்படுவதின் விளைவாக இச்சமூகம் கடுமையான சமூகப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது”, என்று அம்பிகா கூறினார்.