நாங்கள் நாய்கள் அல்ல!! -சிவாலெனின்

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Street-Dogs-Indiaதெருவில் குறைத்துக்

கொள்வோம்

சொந்த இனத்துக்குள்

அடித்துக் கொள்வோம் – ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல…….

இனத்தின் உரிமையில்

கவலையில்லை

அடுத்தவன் உணவை

அபகரிப்போம்

கூட்டமாக இருந்தாலும்

ஒற்றுமையிருக்காது – ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல……

கண்ட இடத்தில்

சிறுநீர் கழிப்போம்

நாகூசும் வார்த்தைகளை

கக்கி வைப்போம்

யாரை பார்த்தாலும்

உறுமியிருப்போம் -ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல……

மனித தன்மை

உண்டு

நன்றியோடும் இருப்போம்

அவற்றையெல்லாம் மறந்திருப்போம்

ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல……

யார் எங்கு குரைத்தாலும்

கூட்டாக குரைப்போம்

ஏனென்று கேட்காமல்

எங்களுக்குள்ளேயே

கடித்து குதறிக்கொள்வோம் – ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல………

நாய்க்கான அனைத்து

குணமும் எங்களிடத்தில்

விசுவாசமும் கூட –ஆனால்

நாங்கள் நாய்கள்

அல்ல!!!!                     

(சிவாலெனின்,சுங்கை,பேராக்)

 

TAGS: