இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இந்திய முஸ்லீம்கள் அவ்வளவாக சேர்வது இல்லை

isis-india2டெல்லி: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு அனுதாபம் காட்டுபவர்களை இந்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பலர் குறை கூறுகிறார்கள். வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளில் சேர முயற்சிப்போரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி வரும் உளவுத் துறை தனது செயல்பாடுகளை மாற்றியுள்ளது. முன்பு எல்லாம் வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் ஏதாவது தொடர்பு வைத்திருக்கும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுத்தார்கள். ஆனால் அண்மை காலமாக போலீசாரும் சரி, பாதுகாப்பு ஏஜென்சீக்களும் சரி தீவிரவாத அமைப்புகளில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் அளித்து அவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

 

முஸ்லீம்கள் முஸ்லீம் தீவிரவாத அமைப்புகளில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வளவாக சேர்வது இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை நடத்திய தீவிரவாதத்திற்கு எதிரான கூட்டத்தில் கலந்து கொண்ட உளவுக் கமிட்டியின் துணை தலைவர் ஆர். என். ரவி கூறுகையில், இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லீம்கள் உள்ளனர். நாட்டு மக்கள் தொகையில் அவர்கள் 14.88 சதவீதம் உள்ளனர். இந்தியாவில் அவ்வளவு முஸ்லீம்கள் இருப்பினும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் வெகு சிலரே சேர்கிறார்கள். தீவிரவாதம் நாட்டிற்கு வெளியே இருந்து தான் வருகிறது என்றார்.

ஜிஹாத் உள்நாட்டிலேயே உருவாகும் ஜிஹாத் என்பது பாகிஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது தான் இந்தியன் முஜாஹிதீன், சிமி உள்ளிட்ட அமைப்புகளை வளர்த்து இந்தியாவில் போராட வைத்தது. இந்த அமைப்புகளில் இந்திய வாலிபர்களை சேர்த்தால் யாருக்கும் பாகிஸ்தான் மீது சந்தேகம் வராது என்பது தான் அவர்களின் நினைப்பு. உள்நாட்டிலேயே வளரும் ஜிஹாத் அமைப்புகள் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருந்ததுடன், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. முஸ்லீம்களை பிரித்துப் பார்ப்பது தான் பல இந்திய வாலிபர்கள் தீவிரவாத அமைப்புகளில் சேர்க்கப்பட்டதற்கு காரணம் என்பதை அரசும், உளவுத் துறையும் உணர்ந்தன. ஆனால் இந்த பாகுபாட்டை மாற்றப் போவதாக புதிய அரசு அறிவித்தது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற வாலிபர்களுக்கு கவுன்சிலிங் அளித்து அவர்களும் இந்தியாவின் ஒரு அங்கம் என்பதை புரிய வைத்தது நமக்கு உதவிகரமாக உள்ளது என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சரியான பாதை அமெரிக்காவில் அதிகாரி ரவி கூறியது இந்தியா மதத்தால் பிரிந்து கிடக்கவில்லை என்பதையும், முஸ்லீம்கள் தேவையில்லாமல் குற்றம்சாட்டப்படவில்லை என்ற நம்பிக்கை அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு புரிய வைக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போராட அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்க பிரதமர் மோடி மறுத்துவிட்டார். அமெரிக்காவுடன் சேர்ந்து அந்த போரை நடத்தினால் அது இந்தியாவில் பிரச்சனையை அதிகப்படுத்தும் என்பது இந்தியாவுக்கு தெரியும். இந்தியா போலியான போரை நடத்துவதாக குற்றம்சாட்டப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ். பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று இந்தியா நம்புகிறது. ஏதோ சில வாலிபர்கள் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளதால் ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தையே குறை கூறுவது நல்லது அல்ல என்று உள்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியன் முஜாஹிதீன் 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உச்சத்தில் இருந்தபோது பலர் கைது செய்யப்பட்டனர். காரணமே இல்லாமல் மகாராஷ்டிராவின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் சிலரை கைது செய்தனர். மங்களூரில் பட்கலைச் சேர்ந்த வாலிபர் தீவிரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டபோது தான் அவர்களின் விசாரணையின் அலட்சியம் தெரிய வந்தது. காரணம் இல்லாமல் கைது செய்வதால் பழிவாங்கும் எண்ணம் ஏற்பட்டு அதனால் தேவையில்லாத பல பிரச்சனைகள் உருவாகும்.

-http://tamil.oneindia.com
TAGS: