எச்சரிக்கும் வடகொரியா: தாக்குதல் நடத்த அடம்பிடிக்கும் அமெரிக்கா, தென்கொரியா

kimதென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948ம் ஆண்டு தனித்தனி நாடுகளாக பிளவுபட்டன.

இதன்பின் கடந்த 1950ம் ஆண்டு முதல் 1953ம் ஆண்டு வரை இரு நாடுகளுக்கிடையே போர் நடந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்று வரை பகைமை நீடித்து வருவதால் தென் கொரியாவும், அமெரிக்காவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதற்கு பதிலடியாக வடகொரியாவும் அதிநவீன அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால், அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி வைப்பதாக வடகொரியா அறிவித்தது.

ஆனால் இதை தென்கொரியாவும், அமெரிக்காவும் நிராகரித்து விட்டு கூட்டு பயிற்சியில் ஈடுபடபோவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா அரசின் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, தென்கொரியா – அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியின் நோக்கம், வடகொரியாவை தாக்கி ஆக்கிரமிப்பது தான் எனக் குற்றம் சாட்டியுள்ளது.

-http://world.lankasri.com