அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்பதே மாதத்தில் தீர்த்துவிட முடியாது: நரேந்திர மோடி

narendra_modiகுடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர்,

 

அரசு திட்டங்களின் பெயர்கள் குறித்து விவாதிப்பது தேவையற்றது. அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது பிரச்சனை அல்ல. வளர்ச்சியே நோக்கம். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

நாட்டை தூய்மைப்படுத்தும் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது. தூய்மையான தேசமும், மகளிர் கவுரவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்த அம்சம். தூய்மை இந்தியா திட்டம் ஒரு தொடர் இயக்கமாகும்.

எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வ யோசனையை ஏற்கத் தயாராக உள்ளோம். காங்கிரஸ் ஆட்சி தோல்வியின் சிகரம் 100 நாள் வேலைத்திட்டம். காங்கிரஸ் அரசின் தோல்விக்கு கண்கூடான எடுத்துக்காட்டு 100 நாள் வேலைத்திட்டம். மக்களுக்கு மத்திய அரசு ஆற்றும் சேவையை அரசியலாக்க வேண்டாம்.

நாட்டை ஊழல் நாசமாக்கிவிட்டது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தான் ஊழலை ஒழிக்க முடியும். கருப்பு பணத்தை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது மத்திய அரசு. கருப்புப் பணத்தை கண்டறியும் பணியை அரசு விரைவுப்படுத்தி உள்ளது. கருப்புப் பணம் பதுக்கியவர்கள் யாரும் தப்ப அனுமதிக்க மாட்டோம்.

நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்பதே மாதத்தில் தீர்த்துவிட முடியாது. பழிவாங்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபடவில்லை. விசாரணைக்கு உத்தரவிடுவதை அரசின் பழிவாங்குட்ம செயல் என விமர்சிக்கக்கூடாது. அரசின் செயல்பாடுகளை தேர்தல் வெற்றி, தோல்வி மூலம் உடைபோடக்கூடாது என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: