யூதர்களுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்துல்கள்: எச்சரிக்கும் யூதத் தலைவர்

jew_leader_001ஜேர்மனியில் யூதர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என யூத அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஜேர்மனி தலைநகரான பெர்லினில்(Berlin) உள்ள மத்திய யூதர்கள் கவுன்சிலின் தலைவர் ஜோசப் ஸ்கூஹஸ்டர்(Josef Schuster) கூறுகையில், பெர்லின் நகரில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகுதியாக உள்ளதால், அந்த பகுதிகளுக்கு யூதர்களுக்குரிய அடையாளங்களுடன் செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

குறிப்பாக யூதர்கள் அணியும் கிப்பா(kippah) என்ற தொப்பியை அணிந்து செல்வதை பரிசீலனை செய்ய வலியுறுத்திய அவர், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த முனிச்(Munich) நகரத்தை சேர்ந்த ஊடகவியலாளரும் யூத சமுதாய தலைவர்களில் ஒருவரான டெர்ரி ஸ்வார்ட்பெர்க்(Terry Swartzberg) பேசியதாவது, நான் யூதர்களுக்குரிய தொப்பியை பல வருடங்களாக அணிந்து வருகிறேன். ஆனால் நான் எந்த பிரச்சனையையும் சந்தித்தது இல்லை

சமீப காலங்களில் ஜேர்மனி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளதால், அவற்றின் மூலம் யூத சமுதாயத்தினர் நன்கு பயனடைவதுடன், எந்த இடையூறுகளும் இன்றி பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

எனவே ஜோசப்பின் கருத்து, வழக்கத்திற்கு ஏற்புடையதாக இல்லை என பேசியுள்ளார்.

இதற்கிடையே சிறிய மற்றும் நடுத்தர எண்ணிக்கையை உடைய யூதர்களின் பகுதிகளில், அவர்களுக்கான சராசரி தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களை அதிகரிப்பது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

-http://world.lankasri.com