‘மறைமுகக் கரங்கள்’ பாஸ் கட்சியின் முற்போக்குவாதிகளை ஒழித்துக்கட்ட முயல்கின்றன

rawaஜூன்  மாத  பாஸ்  கட்சித்  தேர்தல்  பழமைவாதிகளுக்கும்  சீர்திருத்தவாதிகளுக்குமிடையிலான  போட்டியாக  இருக்கும்  எனப்  பரவலாகக் கருதப்பட்டு வரும்  வேளையில்,  “மூன்றாவது  சக்தி”  ஒன்று  அம்னோவின்  ஆதரவுடன்  இடையில்  புகுந்து  குட்டையைக்  குழப்புவதாக  பாஸ்  தலைவர் ஒருவர்  கூறினார்.

பாஸில் துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு, மத்திய  செயல்குழு  உறுப்பினர்  டாக்டர்  ஹட்டா ரம்லி  போன்ற  முற்போக்காளர்களின்  பெயரைக்  கெடுப்பதற்காகவே  ஓர்  இயக்கம்  நடப்பதாகக் கூறிய  பாஸ் மத்திய   செயல்குழு  உறுப்பினர்  முஜாஹிட்  ராவா, அதற்குப்  பின்னணியில்  அம்னோவின்  “மறைமுகக்  கரங்கள்”  இருக்கலாம்  என்பதையும்  மறுக்கவில்லை.

“இஸ்லாமிய  உலாமாக்களுக்கும்  முற்போக்குவாதிகலுக்குமிடையிலான போட்டி  என்ற  நிலை  இனியும்  இல்லை.

“மூன்றாவது  சக்தி  ஒன்று  கட்சியில்  குறிப்பிட்ட  தரப்பை  ஆதரிக்கிறது. அவர்களின்  நோக்கம்  கட்சி  முன்னேறக்  கூடாது  என்பதுதான். கட்சி  எப்போதும்  பின்தங்கி இருக்க  வேண்டும்  என்பதே  அவர்களின்  நினைப்பாகும்”, என  முஜாஹிட்  கூறினார்.