ம இ காவின் நீதி மன்ற முடிவு இந்தியர்கள் பிரச்சனைக்கு தீர்வாகாது – மோசமாகும் அபாயம்! ஒரு முன்னாள் கிளைததலைவரின் ஆருடம்.

micம இ காவின் இரு தரப்பு போட்டிகள் மலேசிய இந்தியர்களின் சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைக்கு தீர்வாகாது என்பது பழனிக்கும், சுப்ரவுக்கும் தெரியும்.

இப்போது நடப்பது வெறும் “பதவிப்போர்” இந்த சட்டப்போர் ஓர் அறிவிலித்தனம். இதில் பல பதவிகள் ஊசலாடுகிறது.
பிள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டிக்கொண்டு இருக்கும் ஒரு முன்னாள் நாடோடி வருங்கால நாடோடிகளை அலிபாபாவாக்கி மைக்கா போல மூட்டை கட்டலாம் என்ற
எண்ணம் ஒரு பக்கம் ஓட ….

சட்டம் judicial review என்கிறது? ரோஸ் கு அரசியல் கட்சிகளை அமைக்க அடிப்படை சட்டம் இருக்கும்.ம இ காவுக்கும் சட்டம் உண்டு.
ம இ கா ரோஸிடம் annual returns கொடுத்து தங்கள் தகுதியை உறுதி செய்து இருக்கும். இதற்குப்பிறகு வரும் சிக்கல்கள் எல்லாம் கட்சியின் சட்ட உட்பிரிவிக்கு சொந்தம்.அடிப்படையை மீறுவோர் கட்சியில் இடை நீக்கம் செய்யப்பட வழிகள் உண்டு. ஆப்பில் பழம் பறிக்கபபோய் டுரியான் தலையில் விழுந்த கதையாய் தலைகள் நொந்த நிலைதான்.

தேர்தலில் தோற்ற தரப்பு தேர்தல் சட்டப்படி நடந்தது ஆனால் தில்லு முல்லுகள் , வாக்குகள் ,லஞ்சம் ,வஞ்சம் என்கிறது . வென்ற தரப்பு எல்லாம் ஒக்கே பழனிதான் தலைவர் என்கிறது. ஆனால் எங்கள் ஆள் பலம் பழமாக இல்லை. சாப்பிட கொஞ்சம் “கூட தா” என்கிறது பழனி தந்துவிட்டு போகலாம். ஆனால் இப்ப இந்த பழம் நீ யாருக்கோ பழுக்க மறுக்கிறது.

சுப்ரா .சரவணன் சார்பு ம இ கா பதவியில் இருந்தும் முழு அமைச்சர் துணை அமைச்சர் பதவிகளில் இருந்தும் ஏதோ இன்னும் வேலை நடத்த ஆசைபடுவது புரிகிறது . இன்னும் உரிமையோடு நடத்த கட்சியை முழு ஆட்சிக்கு கொண்டுவர ஆசைபடுவதும் நியாயம்தான். இதில் ஒரு பட்டாளமே படை எடுத்து ஆடுகிறது. இது சேவைக்கா ? அல்லது 300 கோடி சொத்தை கப்பாத்தவா? அமுக்கவா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுகிறது ! இப்ப இதுவெல்லாம் வேகாது என்று பழனி படம் காட்டுகிறார் .

மறு புறம் பழனி 300 கோடியை ம இ கா உறுப்பினர்கள் பேரில் போட வேண்டும் என்ற விந்தையை வலையாக விரித்து உள்ளார். மைக்கா 10 கோடியை 8 கோடியாக விலையாக்கிய போது (பழனி காலத்தில்) இவர் காப்பாத்த வில்லை ! சாமிவேலுடன் ஆட்டம் போட்ட டெலிகொம் ,தெனகா, இன்னும் சமுதாய பொருளாதார போர்வைகளை இவர் தூக்கிக்கூட பார்க்க வில்லை.

நஜிப் தலையிட்டு ஞானலிங்கம் மைக்கா வை விழுங்கிய போது பழனிதான் தலைவர் வாய் திறக்க வில்லை. மைக்கா வை ஒரு turn around exercise செய்ய அல்லது restructure செய்ய வலுவில்லாத தலைவர் இந்த சமுதாயத்தை எங்கனம் தூக்கி தாங்க போறார் என்பது பலரின் கேள்வி.

நஜிபின் பேரம் படி அடுத்த ம இ கா வின் தேர்தலுக்குள்ளும் 2018 பொது தேர்தலுக்கு முன் பழனி விலக வேண்டும் என்ற BN ன் எழுதா ஒப்பந்தம் ஒன்று உண்டு ,என்பதை பல பத்திரிக்கைகளும் நாடே அறியும். இருந்தும் ம இ காவின் இந்த கலவரத்துக்கு காரணம் சமீப காலமாக பழனி புதிய பாடல் ஒன்றை பாடி படத்தை இடைவேளை உச்ச கட்டத்துக்கு கொண்டு போனார்.

அதுதான் ” மக்கள் என்னை விரும்புகிறார்கள்” நான் தலைவராக தொடர்வேன் என்ற விஷக்காற்று கர்போண்டி கரிய மிளவாயாக அவசரமாக ( அவுத்து) சுத்தல் விட்டதுதான் இன்றய இருபக்க சுமைதாங்கிகள் படும் பிரவச கருக்களைவு.
நேற்றுக்கூட ஒரு செய்தி …நீண்ட நாள் பிள்ளை இல்லாத ஒருத்தி தன் புருஷனை திருப்தி படுத்த மாற்றான் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தையை கத்தியில் கிளறி பிள்ளையை திருடினாலாம். இது கடமை உணர்வா ? தாய்மை தியாகமா ?

ஆனால் இப்போது ம இ காவில் நடக்கும் போர் எதற்கு ?இது இந்த இந்தியன் சமுதாயத்தை எங்கு போய் நிறுத்தப்போகிறது ? கூட்டி கழித்துப பார்த்தால் நமது பெருமைகள் பொது தேர்தல் விடியலில்தான் உண்டு. நீங்கள் இன்னும் 100 தலைவர்களை தேர்வு செய்யுங்கள் 10 அமைச்சர்களை அமையுங்கள் .. 2020குல் அல்லது அதற்குபின் என்ன கிழிக்க போகிறீர்கள் என்பதுதாம் 5 லட்சம் ம இ கா உறுபினர்களின் கேள்வியாகும்.

உதாரணத்துக்கு வைத்துககொள்வோம் நீதிமன்றம் எந்தப்பக்கம் தீர்ப்பை தந்தாலும் ஒருவர் கேசை அப்பீல் நீதிமன்றத்துக்கு இழுப்பார். அங்கே கேஸ் டிஸ்மிஸ் ஆகும் பட்சத்தில் பழனிவேல் கட்சியை வழி நடத்துவார். போதுமடா சாமீ என்று மக்கள் அலற !? கட்சி மக்கள் இரண்டாவர்கள் ..பொதுததேர்தல் முடிவுகள் பக்கம் பக்கமாக பத்திரிகையில் குதறும் . சமுதாய நீரோடையில் ஓட்டையும் உடைச்சளும் உச்சத்தை எட்டும். ஆளும் கட்சி தடுமாறும் ,,,,பாகாதான் பரிகாசம் மக்களை குழப்பும்.

PKR சுரேந்திரன் பேசும் 300,000 இந்தியர் பிரஜா உரிமை சிவா சுப்பிரமணியம் இருக்க மாட்டார் ? என்ன செய்யலாம் என்று ம இ கா கிளை தலைவர்கள் எந்த கொடியும் பிடிக்க மடியாத நிலையில் முயலும் இல்லை அமையும் இல்லை விவேகம் எனும் முயலாமை தலைமையால் தூவானம் தொடருமா என்று வெறுத்து பார்ப்போம்.

இது ஒரு சமுதாயத்தின் சுய நிர்ணய விழிப்புக்கு எழுதியது. நிலையற்ற தலைமைத்துவம் ஏலனதுக்கும் வறுமைக்கும் ஆளாகும் போது நமது மரியாதை கௌரவம் அரிசயல் விமோசனங்கள் காலத்தை காலவதியாக்கிவிடும். கடந்த காலங்களை நிமிர்த்தி பார்ர்கவும் , நிகழ காலத்தை நேர் செய்யவும், எதிகாலத்தை வென்று வளர்க்கத்தான் “அரசியல்” தலைவர்கள் . அல்லது வீட்டோடு ஊமையாகிப் போகலாம்.

-ஒரு முன்னாள் கிளைததலைவர்