ஜி25: ஹுடுட்டை ஏற்பது மிதவாதத்தைக் கைவிடுவதாக பொருள்படும்

g25கூட்டரசு  அரசமைப்பை  நிலைநிறுத்தி ஹுடுட்  சட்டம்  கொண்டு  வருவதைத் தடுக்க  வேண்டும்  என  மலாய்ச்  சான்றோர்கள்  25-பேரடங்கிய  குழு  புத்ரா  ஜெயாவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறது.

நாடு  சுதந்திரம்  பெற்றதிலிருந்து  மலேசியா  மிதவாதப்  பாதையைத்  தேர்ந்தெடுத்து  அந்தப்  பாதையில்தான்  புத்ரா  ஜெயா  நாட்டைச்  செலுத்திக்  கொண்டிருக்கிறது  என  அக்குழு இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“பாஸின்  ஹுடுட்  சட்டம்  அமலாக்கப்பட்டால்  மலேசியா  மிதவாதப்  பாதையைக்  கைவிடுவதாகத்தான் உலகுக்குத்  தோன்றும்”, என  அது  கூறிற்று.

பல  இனங்களையும்  சமயங்களையும்  கொண்ட மலேசியாவில்  ஹுடுட்டைச்  செயல்படுத்த  வேண்டிய  அவசியம்  என்ன  என்றும் அது  வினவியது.

கூட்டரசு  அரசமைப்புத்தான்  நாட்டின்  தலையாய  சட்டமாகும். அதைப்  பாதுகாப்பதில்  அரசாங்கம்  உறுதியாக  நடந்துகொள்ள  வேண்டும்  என்று ஜி25  கேட்டுக்கொண்டது.