3 மாதங்களில் ஆறு மரணங்கள்; போலீஸ்தான் விளக்க வேண்டும்

suaram2015-இல்  மூன்றே  மாதங்களில் ஆறு  பேர்  போலீஸ்  காவலில்  இருந்தபோது  இறந்து  போனார்கள். அந்த  வகையில்  இறந்த  ஆறாவது  கைதி முகம்மட்  ஜவாரி   முகம்மட்  யூனுஸ்.

அவரது  இறப்புக்கான காரணத்தைக்  கண்டறிய  விசாரணைகள்  நடந்திருக்கும். தொடக்கநிலை  விசாரணைகளின்  முடிவுகளை  போலீசார்  வெளியிட  வேண்டும்  என  சுவாராம்  கேட்டுக்கொண்டிருக்கிறது.

“போலீஸ்  காவலில்  நிகழும்  மரணங்கள்மீது  நடத்தப்படும்  விசாரணைகளின்  முடிவுகளை போலீசார்  பொதுமக்களுக்குத்  தெரிவிப்பது  நல்லது.

“இது தப்பான தகவல்கள் பரவுவதையும்  குழப்பங்கள்  உருவாவதையும் தடுக்க உதவும்”, என்று  அந்த  மனித  உரிமை  அமைப்பு  ஓர்  அறிக்கையில்  கூறியது.

முகம்மட் ஜவாரி  2013-இல்  நிகழ்ந்த  ஒரு  சம்பவம்  தொடர்பில் மார்ச்  12-இல்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டார்.

எட்டாண்டுச்  சிறையும்  மூன்று  பிரம்படிகளும்  தண்டனையாக  வழங்கப்பட்ட  அவர்  ஈப்போ  தடுப்பு  மையத்துக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.

அங்கு  அவர்  கழிப்பறைக்குச்  செல்லும்  வழியில்   கீழே  விழுந்ததில்  தலையில்  காயம்பட்டு  மருத்துவமனைக்குக்  கொண்டு  செல்லப்பட்டார்.

முகம்மட்  ஜவாரி  ராஜா  பெர்மய்சூரி  பைனுன்  மருத்துவமனையில்  பின்னிரவு  மணி 1.25க்கு  காலமானார்.