முஸ்லிம் என்ஜிஓ: எரிக் பால்சன் இஸ்லாத்துக்கு எதிரானர், அவரைத் தடுத்து வைப்பீர்

pembinaசுதந்திரத்துக்காக  போராடும் வழக்குரைஞர்கள் அமைப்பின்  செயல்முறை இயக்குனர்  எரிக் பால்சன்  இஸ்லாத்துக்கு எதிரி  என்று  வருணித்த  பெர்சத்துவான்  இஸ்லாம்  மலேசியா(பெம்பேஎனா)  அரசாங்கம்  அவர்மீது  கடும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொண்டது.

பால்சன்  இஸ்லாத்தை இழிவுபடுத்தி  வந்திருப்பதாக பெம்பேனா தலைவர்  இப்ராகிம்  முகம்மட்  ஹசான் அல்-ஹாபிஸ்  கூறினார்.

“அவர்  அறியாதவராக  இருந்தால்  முதலில்  கண்டிக்கப்பட்டபோதே  நிறுத்திக்  கொண்டிருப்பார்.

“ஆனால்  அவர்  மலேசிய  இஸ்லாமிய  மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்), வெள்ளிக்கிழமை  தொழுகையுரை, ஹுடுட்  ஆகியவற்றைத்  தொடர்ந்து  குறைசொல்லி  வந்திருக்கிறார். அதனால்  பால்சன்  இஸ்லாத்துக்கு-எதிரி என்ற  முடிவுக்கு  வருகிறேன்”, என்றவர்  இஸ்மாவெப்பிடம்  தெரிவித்தார்.

அரசாங்கம்  உடனடி   நடவடிக்கை  எடுத்து  பால்சன் தேசநிந்தனைமிக்க  வகையிலும்  இனங்களைப்  பிளவுபடுத்தக்  கூடிய வகையிலும்  பேசுவதைத்  தடுத்து நிறுத்த  வேண்டும்  என்றாரவர்.

மற்ற  சமய  விவகாரங்களில்  தலையிடுவதை  நிறுத்திக்  கொள்ள  வேண்டும்  எனவும்  பெம்பேனா  தலைவர்  பால்சனுக்கு  அறிவுறுத்தினார்.

“பால்சன் இஸ்லாமிய  விவகாரங்களில்  தலையிடக்  கூடாது, சொல்லப்போனால்  வேறு  எந்தச்  சமய  விவகாரத்திலும்  தலையிடக்  கூடாது”, என்றார்.